திருத்தணி: கொரோனா குறித்து வதந்தி பரப்பிய 2 பேர் கைது

திருத்தணி: கொரோனா குறித்து வதந்தி பரப்பிய 2 பேர் கைது
திருத்தணி: கொரோனா குறித்து வதந்தி பரப்பிய 2 பேர் கைது
Published on

திருத்தணியில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளதாக வதந்தி பரப்பிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனோ வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. நாளுக்குநாள் உயிரிழப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. உலக அளவில் கொரோனாவால் உயிரிழ்ந்தவர்களின் எண்ணிக்கை 37,780ஆக அதிகரித்துள்ளது. உலக அளவில் கொரோனாவால் 7,84,381 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 1,65,035 பேர் சிகிச்சைப்பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 32 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிகை 1,071லிருந்து 1,251 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தை பொருத்தவரை 67 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்றாக உள்ளது. இதனால் மக்கள் கடும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியை சேர்ந்த சாமிநாதன், அப்துல்ரகுமான் ஆகியோரை கொரோனா குறித்து வதந்தி பரப்பியதாக போலீசார் கைது செய்தனர். கொரோனா வைரஸ் தொற்று குறித்து வதந்தி பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com