சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கியது கரூர் குற்றவியல் நீதிமன்றம்... ஆனால்....!

கஞ்சா வைத்திருந்த வழக்கில் ஜாமீன் கோரி சவுக்கு சங்கர் தாக்கல் செய்த மனுவை, ஒத்திவைத்தது மதுரை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம். அதேநேரம் பண மோசடி வழக்கில் சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது கரூர் நீதிமன்றம்.
Savukku shankar
Savukku shankarpt desk
Published on

தேனி மாவட்டத்தில் தங்கியிருந்த பிரபல யூ-டியுபர் சவுக்கு சங்கர், தனது அறையில் 2.5 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் தரப்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அந்த வழக்கில் சவுக்கு சங்கருக்கு 6வது முறையாக ஜூலை 30ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீடித்து மதுரை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

Savukku shankar
Savukku shankarpt desk

இதனிடையே சென்னை உயர்நீதிமன்ற விசாரணையில் சவுக்கு சங்கர் கோவை மத்திய சிறையில் இருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.

Savukku shankar
சென்னை: இன்ஸ்டா காதலியை திருமணம் செய்த மறுநாளே வீட்டில் பார்த்த பெண்ணுடன் திருமணம்.. சிக்கிய இளைஞர்!

இந்நிலையில் இந்த வழக்கில் சவுக்கு சங்கர், ஜாமீன் கோரி ஏற்கனவே தாக்கல் செய்த 2 மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து இந்த வழக்கில் ஜாமீன் கோரி 3வது முறையாக தாக்கல் செய்த மனுவை மதுரை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி செங்கமலச் செல்வன் ஒத்திவைத்தார்.

சவுக்கு சங்கர்
சவுக்கு சங்கர் pt web

அதேநேரம் பண மோசடி வழக்கில் சவுக்கு சங்கருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. கரூர் குற்றவியல் நீதிமன்றம் இந்த ஜாமீன் உத்தரவை வழங்கியுள்ளது. முன்னதாக ரூ 7 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக பிரியாணி கடை உரிமையாளர் ஒருவர் அளித்த புகார் மீதான வழக்கில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டிருந்தார். ஆனால் பல வழக்குகளில் சவுக்கு கைதாகியிருப்பதால், அவரால் வெளியே வரமுடியாத நிலையே இருக்கிறது. தன் மீதான பல வழக்குகளில், ஒரு வழக்கில் மட்டுமே அவர் ஜாமீன் பெற்றுள்ளார். இந்த பண மோசடி வழக்கு தொடர்பான பின்னணியை, கீழ் இணைக்கப்படும் இணைப்பில் விரிவாக அறியலாம்...

Savukku shankar
சவுக்கு சங்கர் மீதான ஆன்லைன் மோசடி வழக்கு - கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் புதிய உத்தரவு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com