மயங்கி கிடந்த மூதாட்டியை இழுவை வண்டியில் ஏற்றிச்சென்ற சிறுவர்கள்... குவியும் பாராட்டு!

மயங்கி கிடந்த மூதாட்டியை இழுவை வண்டியில் ஏற்றிச்சென்ற சிறுவர்கள்... குவியும் பாராட்டு!
மயங்கி கிடந்த மூதாட்டியை இழுவை வண்டியில் ஏற்றிச்சென்ற சிறுவர்கள்... குவியும் பாராட்டு!
Published on

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே ரேஷன் கடைக்கு பொங்கல் பரிசு வாங்க சென்றபோது நடக்க முடியாமல் தவித்த மூதாட்டியை இழுவை வண்டியில் வைத்து இழுத்துச்சென்று வீட்டில் விட்டு உதவிய சிறுவர்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகிலுள்ள கொத்தமங்கலம் மேற்கு கிராமத்தில் தனது மகளுடன் வசித்துவருகிறார் 75 வயது மூதாட்டி சுப்புலெட்சுமி. இவர் கடந்த இரு நாட்களுக்கு முன்பு தமிழக அரசு வழங்கும் பொங்கல்பரிசு தொகுப்பு வாங்க ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ரேஷன்கடைக்கு நடந்தே சென்றிருக்கிறார். சுமார் 3 மணி நேரமாக நடக்கமுடியாமல் சென்றபோது பாதிவழியில் மயங்கி விழுந்தார். சாலையோரம் சுருண்டு கிடந்த மூதாட்டியை அப்பகுதியை சேர்ந்த வீரமணி என்பவரின் மகன்களான நிதின்(9), நிதிஷ்(9) ஆகிய இருவரும் தனது வீட்டில் கிடந்த இழுவை வண்டியில் ஏற்றி படுக்கவைத்து அவருடைய வீட்டில் கொண்டு போய்விட்டனர்.

சிறுவர்களின் மனிதாபிமானச் செயல்குறித்து புதிய தலைமுறையில் செய்தித் தொகுப்பு வெளியிடப்பட்டது. இந்தச் செய்தியைப் பார்த்து பலரும் அந்தச் சிறுவர்களை பாராட்டி வருகின்றனர். மேலும், கீரமங்கலம் காவல் ஆய்வாளர் பாஸ்கரன், தனிப்பிரிவு போலீசார் இசக்கியா மற்றும் அவரது குழுவினர் சிறுவர்களின் வீட்டுக்குச் நேரில் சென்று இனிப்பு வழங்கி பாராட்டியதுடன் ரொக்கப்பரிசுகளையும் வழங்கியுள்ளனர்.

இது குறித்து சிறுவர்கள் கூறும்போது, ‘’அந்தப் பாட்டி ரேஷன் கடையில இருந்து வீட்டுக்கு போறப்போ நடக்கமுடியாம மரத்தடியில கிடந்தாங்க. அந்தப் பக்கமா நாங்களும் எங்க அம்மாவும் வந்தோம். எங்கம்மா அவங்க ஸ்கூட்டியில ஏறச் சொன்னாங்க. ஆனா அந்தப் பாட்டியால ஏறி உக்காற முடியல. அப்பறம்தான் நாங்க வீட்டுக்குப்போய் வண்டிய இழுத்துவந்து தூக்கி உக்கார வைச்சு இழுத்துபோய் அவங்க வீட்ல விட்டோம்’’ என்று கூறினர்.

இதனால் வயது முதிர்ந்த மூதாட்டியின் நிலைகுறித்து ஆய்வுசெய்த அதிகாரிகள், வரும் காலங்களில் ரேஷன் பொருட்களை அந்த மூதாட்டியின் வீட்டிற்கே சென்று வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக கூறினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com