கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள், பீளமேடு பகுதியில் இருந்து கஞ்சா பொட்டலங்களை எடுத்து வருவதாக எலவனாசூர்கோட்டை காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து எம்ஜிஆர் சிலை அருகில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர் காவல்துறையினர்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞர்கள், போலீசாரை கண்டதும் நிற்காமல் சென்றதால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை துரத்திச் சென்று பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவர்களிடம் விசாரணை செய்ததில் அவர்கள் கஞ்சா பொட்டலங்களை வாங்கி வந்து அதனை சிறிய சிறிய பொட்டலங்களாக மடித்து வைத்து அதில் இனிப்பு பண்டங்களை சேர்த்து பள்ளி மாணவர்களிடம் விற்பனை செய்வது தெரிய வந்தது.
இதனை அடுத்து அவர்களிடமிருந்து 500 கிராம் கஞ்சா போட்டலங்களை கைப்பற்றியதோடு அதனை மொத்தமாக விற்பனை செய்த பீளமேடு கிராமத்தைச் சேர்ந்த ராஜா மற்றும் மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பாண்டியன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்தச்சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது