இரட்டை இலை: இருதரப்பு வாதங்கள் என்ன?

இரட்டை இலை: இருதரப்பு வாதங்கள் என்ன?
இரட்டை இலை: இருதரப்பு வாதங்கள் என்ன?
Published on

அதிமுகவின் சின்னமான இரட்டை இலை, தங்களுக்கே சொந்தம் என்று சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருதரப்பினரும் தேர்தல் ஆணையத்தில் வாதங்களை முன்வைத்துள்ளனர்.

சசிகலா தரப்பு வாதம்:

* பெரும்பான்மையான செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு எங்களுக்கு உண்டு.

* கட்சிப் பதவிக்கு சசிகலா வருவதை கட்சியின் சட்ட விதிகள் தடுக்கவில்லை.

* அதிமுகவில் பிளவு இல்லை.

* பெரும்பாலான எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களின்‌ ஆதரவு உள்ளது.

ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வாதம்:

* தேர்தலில் போட்டியிட தகுதியில்லாத சசிகலா, வேட்பாளரை எப்படி அங்கீகரிக்க முடியும்?

* அதிமுக சட்ட விதிகளின்படி தற்காலிக பொதுச் செயலாளர் பதவி கிடையாது

* தற்காலிக பொதுச்செயலாளர் பதவிவகிப்பவர் வேட்பாளருக்கு சின்னம் ஒதுக்க முடியாது; கட்சி விதிகளின்படி பொதுச்செயலாளர் மட்டுமே சின்னத்தை ஒதுக்கீடு செய்ய முடியும்.

* குற்றவாளியாக தண்டனை பெற்றவர் அரசியல் நடவடிக்கைகளில் இருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும் என சட்ட ஆணையம், தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை செய்துள்ளது. இதனால், அதிமுகவின் தலைமை பொறுப்பினை சசிகலா வகிக்க முடியாது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com