ஆம்ஸ்ட்ராங் படுகொலை, கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் எதிரொலி: 19 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழ்நாட்டில் பல்வேறு ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
IPS Officers
IPS Officerspt desk
Published on

ஆம்ஸ்ட்ராங் படுகொலை, கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் எதிரொலியாக, தமிழ்நாட்டில் 19 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, ஆம்ஸ்ட்ராங் படுகொலை எதிரொலியாக,

  • தாம்பரம் காவல் ஆணையராக இருந்த அமல்ராஜ், அமலாக்க பணியக சிஐடி ஏடிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தாம்பரம் காவல் ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி அபின்தினேஷ் மோதக் நியமிக்கப்பட்டுள்ளார்.

  • சிபிசிஐடி ஐஜியாக உள்ள அன்புவுக்கு சிபிசிஐடி ஏடிஜிபியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சென்னை வடக்கு கூடுதல் காவல் ஆணையராக நரேந்திரன் நாயர், தெற்கு கூடுதல் காவல் ஆணையராக கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங்
ஆம்ஸ்ட்ராங் pt web
  • சென்னை ஆயுதப்படை பிரிவு ஏ.டி.ஜி.பி.யாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

  • சைபர் கிரைம் பிரிவு ஏ.டி.ஜி.பி.ஆக சந்தீப் மிட்டல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

IPS Officers
“உண்மை குற்றவாளிகளை கண்டறிய சிபிஐ விசாரணை தேவை” ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தாரை சந்தித்தபின் இபிஎஸ் பேட்டி

கள்ளச்சாராயம் அருந்தி 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உதவி ஆய்வாளர்கள் உட்பட 73 காவலர்கள் கூண்டோடு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலுர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவலர்கள் 39 பேர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com