18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: ஆக.31-ல் வாதங்கள் நிறைவு

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: ஆக.31-ல் வாதங்கள் நிறைவு
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: ஆக.31-ல் வாதங்கள் நிறைவு
Published on

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் அனைத்துத்தரப்பு வாதங்களும் வரும் 31-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கை விசாரித்த முன்னாள் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அமர்வு கடந்த ஜூன் 14-ம் தேதி மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. இதையடுத்து வழக்கை மூன்றாம் நீதிபதி எம்.சத்யநாராயணன் விசாரித்து வருகிறார். இவ்வழக்கு மீதான விசாரணையின் 11-ம் நாளான நேற்று, தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல‌.ஏ.க்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமனும், சபாநாயகர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரமும் ஆஜராகி வாதிட்டனர். 

நீதிமன்ற நேரம் முடிவடைந்த நிலையில், தனது வாதங்களை முன்வைக்க மேலும் ஒருமணி நேரம் அவகாசம் தேவைப்படுவதாகவும் எனவே வழக்கை ஒத்திவைக்குமாறு வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம் கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்ற நீதிபதி, வரும் 31-ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார். அன்றைய தினம் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைவதால், எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிடப்படலாம். அல்லது தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com