போக்குவரத்து விதிகளை மீறியதாக தமிழகத்தில் இரண்டு நாட்களில் மட்டும் ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 881 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
காவல்துறை இயக்குநர் திரிபாதியின் உத்தரவை அடுத்து கடந்த 14 மற்றும் 15ஆம் தேதிகளில் நான்கு மண்டலங்கள் மற்றும் மாநகராட்சிகள் என தமிழகம் முழுவதும் சிறப்பு வாகனச் சோதனை நடைபெற்றது. அப்போது தலைக்கவசம் அணியாமல் பயணித்ததாக ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நான்கு சக்கர வாகனத்தில் சீட் பெல்ட் அணியாமல் பயணம் செய்ததாக 36 ஆயிரத்து 835 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக 28 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு தினங்களில் மொத்தம் ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 881 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.