தமிழகத்திற்கு திரும்ப கொடுக்கப்படுகிறதா 150 மருத்துவ இடங்கள் ? 

தமிழகத்திற்கு திரும்ப கொடுக்கப்படுகிறதா 150 மருத்துவ இடங்கள் ? 
தமிழகத்திற்கு திரும்ப கொடுக்கப்படுகிறதா 150 மருத்துவ இடங்கள் ? 
Published on

ஆல் இந்தியா கவுன்சிலிங்கிற்கு கொடுக்கப்பட்ட மருத்துவப் படிப்பிற்கான இடங்களில் 150 இடங்கள் நிரப்பப்படாமல் தமிழ்நாட்டிற்கு திரும்பி கொடுக்கப்பட உள்ளது. 

நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுகள் நடந்து முடிந்து அதன் முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தற்போது நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு வருடமும் தமிழ்நாட்டிலுள்ள மருத்துவ படிப்புகளுக்கான மொத்த இடங்களில் 15 சதவிகிதம் மத்திய அரசு நடத்தும் ஆல் இந்தியா கவுன்சிலிங்கிற்கு தரப்படுவது வழக்கம்.

அந்தவகையில் இந்த வருடம் தமிழ்நாட்டிலிருந்து ஆல் இந்தியா கவுன்சிலிங்கிற்கு 550 மருத்துவ இடங்கள் வழங்கப்பட்டது. இவற்றில் இந்தியா அளவில் நடைபெற்று முடிந்த இரண்டாவது சுற்று கலந்தாய்விற்கு பிறகு இன்னும் 25 சதவிகித இடங்கள் நிரப்பட்டாமல் உள்ளன. இவற்றின் மொத்த எண்ணிக்கை 150 இடங்களாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்த இடங்கள் மீண்டும் தமிழ்நாட்டிற்கு திருப்பி கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

கடந்த 2017ஆம் ஆண்டு மத்திய கலந்தாய்விற்கு கொடுக்கப்பட்ட இடங்களில் 107 இடங்கள் நிரப்படாமல் தமிழ்நாட்டிற்கு திரும்பி தரப்பட்டது. அதேபோல 2018ஆம் ஆண்டு கொடுக்கப்பட்ட இடங்களில் 98 இடங்கள் தமிழ்நாட்டிற்கு திருப்பி தரப்பட்டது குறிப்பிடத்தக்கது. மத்திய கலந்தாய்விலிருந்து திருப்பி தரப்பட்ட இடங்கள் தமிழ்நாடு அளவில் நடைபெறும் இரண்டாவது கலந்தாய்வில் நிரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com