சென்னையில் கொரோனாவுக்கு உயிரிழந்த 15 வயது சிறுவன்!

சென்னையில் கொரோனாவுக்கு உயிரிழந்த 15 வயது சிறுவன்!
சென்னையில் கொரோனாவுக்கு உயிரிழந்த 15 வயது சிறுவன்!
Published on

சென்னையில் கொரோனா தொற்று ஏற்பட்ட 15 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் அரிய வகை தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர் ஆவார்.

சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 15 வயது சிறுவனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. சில நாட்கள் அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நுரையீரல் பாதிப்புடன் மூச்சுத்திணறல் அதிகமானதால் கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவனைக்கு சிறுவன் மாற்றப்பட்டார்.

ஜூன் 12-ஆம் தேதி கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட அவருக்கு தொடர்ச்சியாக ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வந்தது. குளுக்கோஸ் மூலமாகவே உடலுக்கு தேவையான சத்துக்கள் கொடுக்கப்பட்டன. ஆனால் பல்வேறு கிகிச்சைகள் பயனளிக்காமல் சிறுவன் உயிரிழந்தார்.


ஏற்கெனவே அரிய வகை தசை சிதைவு நோயால் பல ஆண்டுகளாக போராடி வந்த சிறுவன் கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட கடும் நிமோனியா காய்ச்சல் மற்றும் நுரையீரல் பாதிப்பு உள்ளிட்டவற்றால் மரணத்தை தழுவியது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வேறு நோய் பாதிப்பு இருந்தாலும் தமிழகத்தில் கொரோனாவால் நேர்ந்துள்ள இளம் வயது இறப்பு இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com