பழனி முருகன் கோயில் அருகே ராட்சத மலைப்பாம்பு - பக்தர்கள் கவலை

பழனி முருகன் கோயில் அருகே ராட்சத மலைப்பாம்பு - பக்தர்கள் கவலை
பழனி முருகன் கோயில் அருகே ராட்சத மலைப்பாம்பு - பக்தர்கள் கவலை
Published on

பழனி முருகன் கோயில் அடிவாரத்தில் 15 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்ட நிகழ்வு பக்தர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் நேற்று மலைக்கோயில் அடிவாரம் கிரி வீதியில் உள்ள வன துர்க்கையம்மன் கோயிலில் மலைப்பாம்பு ஒன்று இருப்பதைக் கண்டு பாதுகாப்பு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து பழனியில் பாம்பு பிடிக்கும் நிபுணரான நடராஜன் என்பவருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பாம்புபிடி நிபுணர் நடராஜ், சுமார் ஒருமணிநேரம் போராடி மலைப்பாம்பை பிடித்தார். பிடிபட்ட மலைப்பாம்பு பதினைந்து அடி நீளமும், சுமார் எழுபது கிலோ எடையும் கொண்டிருந்தது. பின்னர் பிடிக்கபட்ட மலைப்பாம்பை வனத்துறையினர் வசம் ஒப்படைத்தார். வனத்துறை அதிகாரிகள் கொடைக்கானல் வனச்சரகத்தில் அடர்ந்த வனப்பகுதியில் மலைப்பாம்பை கொண்டு சென்றுவிட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com