தொடரும் அம்பேத்கர் வழிபாடு சர்ச்சை; 144 தடை உத்தரவால் மயிலாடுதுறையில் பரபரப்பு

தொடரும் அம்பேத்கர் வழிபாடு சர்ச்சை; 144 தடை உத்தரவால் மயிலாடுதுறையில் பரபரப்பு
தொடரும் அம்பேத்கர் வழிபாடு சர்ச்சை; 144 தடை உத்தரவால் மயிலாடுதுறையில் பரபரப்பு
Published on

மயிலாடுதுறை பட்டவர்த்தி கிராமத்தில் அம்பேத்கர் வழிபாடு சர்ச்சை தொடர்ந்துவருகிறது. இந்நிலையில் 5 நாட்களுக்கு 144(3) தடை உத்தரவு பிறப்பித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மயிலாடுதுறையை அடுத்த பட்டவர்த்தி பகுதியில் கடந்த ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவு தினத்தில் அம்பேத்கர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்வது தொடர்பாக இரு சமூகத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் ஈழவளவன் தலைமையில் அம்பேத்கர் படத்துக்கு மரியாதை செய்தபோது மோதல் ஏற்பட்டது. இரண்டு சமூகத்தினர்களும் மாறி மாறி கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

இந்நிலையில், இன்று அம்பேத்கர் நினைவு நாளன்று உருவப்படத்தை வைத்து அஞ்சலி செலுத்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அனுமதி கேட்டிருந்தனர். இதேபோல் அப்பகுதியில் மூவேந்தர் முன்னேற்றக் கழகம் கட்சி சார்பில் அதே பகுதியில் கட்சி அலுவலகம் திறப்பு மற்றும் படத்திறப்பிற்கு அனுமதி கோரியதால் அப்பகுதியில் மீண்டும் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறி, கோட்டாட்சியர் யுரோக மதகடி பகுதியிலிருந்து 1 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு 5 நாட்களுக்கு 144 (3) தடை உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன்படி, நேற்று(05.12.2022) இரவு 10மணி முதல் 10ஆம் தேதி நள்ளிரவு 12மணி வரை தடை உத்தரவு அமலில் இருக்கும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com