136 ஆண்டுகள் பழமையான ஏவி.மேம்பாலம்: புராதான சின்னமாக அறிவிக்க ஆர்வர்கள் கோரிக்கை
மதுரையில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டு 136 ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ள ஏ.வி.மேம்பாலத்திற்கு சமூக ஆர்வலர்கள் பிறந்தநாள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
மதுரை மாநகரில் ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட பாலம் ஏ.வி.மேம்பாலம், வைகை ஆற்றின் வடகரை மற்றும் தென்கரையை இணைக்கும் வகையில் அமைந்துள்ளது. 1886 ஆம் ஆண்டு ஆல்பர்ட் விக்டர் என்ற ஆங்கிலேயரால் கட்டப்பட்ட இப்பாலம், அவரது பெயரின் சுருக்கமாக ஏ.வி.பாலம் என்று மக்களால் அழைக்கப்படுகிறது.
இன்றுடன் 136 வது வயதை தொடங்கும் இந்த பாலம், 1886-ல் 2 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிது. இதன் ஆயுள் காலம் ஐம்பது ஆண்டுகள் என நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், 100 ஆண்டுகளை தாண்டி இன்று 136 ஆம் ஆண்டு பிறந்த நாளை கொண்டாடும் அளவிற்கு கம்பீரமாக காட்சியளிக்கிறது.
இந்நிலையில், மதுரையை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வைகை நதி மக்கள் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து; கேக் வெட்டி உற்சாகமாக பாலத்தின் பிறந்தநாளை கொண்டாடி மகிழந்தனர். நூறு ஆண்டுகளை கடந்த கட்டிடங்களை பாரம்பரிய சின்னம் என்று அறிவிப்பதை போல் ஏ.வி. மேம்பாலத்தை மதுரையின் பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.