விசிக மது ஒழிப்பு மாநாடு | நிறைவேற்றப்பட்ட 13 தீர்மானங்கள் என்னென்ன?

“மதுவிலக்கை தேசியக் கொள்கையாக்க வேண்டும், மதுவிலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு வரிச்சலுகை அளிக்க வேண்டும்” உட்பட 13 தீர்மானங்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற மது ஒழிப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
தொல் திருமாவளவன்
தொல் திருமாவளவன்புதிய தலைமுறை
Published on

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்ட உளுந்துார் பேட்டையில் இன்று மாலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

திமுக சார்பில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ் இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆனி ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க தேசிய துணைத் தலைவர் உ.வாசுகி மற்றும் கூட்டணி கட்சியினர் பலர் பங்கேற்றுள்ளனர். இந்த மது ஒழிப்பு மாநாட்டில், அரசமைப்புச் சட்டம் 47-இல் கூறியபடி மதுவிலக்குச் சட்டத்தை இயற்ற வேண்டும்; மதுவிலக்கை தேசியக் கொள்கையாக அறிவிக்க வேண்டும் என்பவை உள்பட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவை என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்...

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 13 தீர்மானங்கள்

1. மதுவிலக்கை தேசியக் கொள்கையாக அறிவிக்க வேண்டும். அரசமைப்பு சட்டம் 47-ன்படி, மதுவிலக்குச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும்.

2. மதுவிலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து முழுவிலக்கு அளிக்க வேண்டும். மதவிலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு மத்திய அரசு சிறப்பு நிதி வழங்க வேண்டும்.

3. மதுவிலக்கு விசாரணை ஆணையத்தை மத்திய அரசு கொண்டுவர வேண்டும்.

4. மத்திய அரசின் நிதி பகிர்வில் மதுவிலக்கு குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும். மதுவிலக்கை அமல்படுத்தும் மாநிலங்களின் நிதிப் பற்றாக்குறை அறிந்து, நிதிப் பகிர்வைச் செயல்படுத்த வேண்டும்.

5. பூரண மதுவிலக்கை அமல்படுத்த தமிழக அரசு உரிய கால அட்டவணையை வெளியிட வேண்டும்.

இதையும் படிக்க: ஈரான் வீசிய ஏவுகணைகள்... தப்பிக்க ஓடினாரா இஸ்ரேல் பிரதமர்? வைரல் வீடியோ.. உண்மை என்ன?

தொல் திருமாவளவன்
‘மது ஒழிப்பு மாநாடு’ நடத்தும் விசிக... பூரண மதுவிலக்கு சாத்தியமா இல்லையா? சமூக ஆர்வலர் சொல்வதென்ன?

6. போதைப்பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த தமிழக அரசு கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

7. மது மற்றும் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பரப்புரையில் மகளிர் சுய உதவி குழுக்களையும் ஈடுபடுத்த வேண்டும். பொதுமக்களிடையே போதைப்பொருள் பாதிப்பு குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். இதற்கான பரப்பியக்கத்தை தமிழ்நாடு அரசு துவங்க வேண்டும்.

8. தமிழ்நாடு மதுவிலக்கு ஆயத்தீர்வை 2024 – 2025இல் மது மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்கு 4 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகை ரூ.200 கோடியாக உயர்த்தப்பட வேண்டும்.

9. மது நோயாளிகளுக்கு தமிழ்நாட்டில் மறுவாழ்வு மையங்கள் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஏற்படுத்தப்பட வேண்டும். மறுவாழ்வு மையங்கள் அனைத்து வட்டாரங்களிலும் ஏற்படுத்தப்பட வேண்டும். குடிநோயாளிகளின் மறுவாழ்வுக்கு குறைந்தபட்சம் ரூ.100 கோடி ஒதுக்க வேண்டும். குடி நோயாளிகளுடைய குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

10. டாஸ்மாக் தொழிலாளர்களுக்கு மாற்று வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

11. தமிழ்நாடு சட்டப்பேரவையில் பூரண மதுவிலக்கு நிறைவேற்றம் செய்வதற்கு மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அதனை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும்.

12. மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் அரசு மட்டும் ஈடுபட்டால் போதாது. இதில் அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைய வேண்டும். இது அனைவரின் கடமையாகும்.

13. அய்யா வைகுண்டர் பிறந்தநாளன்று மதுக்கடைகளை மூட வேண்டும்”

என 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இதையும் படிக்க: டெஸ்ட் தரவரிசை | முதலிடத்துக்கு முன்னேறிய பும்ரா.. கீழிறங்கிய அஸ்வின்.. Top10 இடத்துக்குள் கோலி!

தொல் திருமாவளவன்
முதலீடு..ஜிஎஸ்டி..விசிக மதுஒழிப்பு மாநாடு|அடுக்கடுக்கான கேள்விகள்.. முதலமைச்சர் அளித்த நச் பதில்கள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com