தமிழக இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 13 திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களும் இன்று பதவி ஏற்றனர்.
தமிழகத்தில் 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 13 இடங்களில் தி.மு.க.வும், 9 இடங்களில் அ.தி.மு.க.வும் வெற்றி பெற்றன. இவர்கள் பெயர்கள் அரசிதழில் வெளியிடப்பட்டன. இந்நிலையில், திமுக வேட்பாளர்கள் இன்று காலை 11 மணிக்கு எம்.எல்.ஏக்களாக பதவியேற்பார்கள் என்று சட்டப்பேரவை செயலகத்தில் திமுக தெரிவித்திருந்தது. இதை சபாநாயகர் ஏற்றுக்கொண்டார்.
அதன்படி, தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற, ஒட்டப்பிடாரம் - சண்முகையா; திருப்பரங்குன்றம் - டாக்டர் சரவணன், அரவக்குறிச்சி- செந்தில் பாலாஜி, திருவாரூர் -பூண்டி கலைவாணன், தஞ்சை - நீலமேகம், ஓசூர் - எஸ்.ஏ.சத்யா, ஆம்பூர் - வில்வநாதன், குடியாத்தம் - காத்தவராயன், பெரியகுளம் - சரவணக்குமார், ஆண்டிபட்டி - மகாராஜன், பூந்தமல்லி - கிருஷ்ணசாமி, பெரம்பூர் -சேகர், திருப்போரூர் -இதயவர்மன் ஆகியோர் இன்று சட்டப்பேரவை உறுப்பினர்களாகப் பதவியேற்று கொண்டனர்
சபாநாயகர் தனபால் அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.