தமிழகத்தில் 1200 பழங்கால சிலைகள் கடத்தல்!

தமிழகத்தில் 1200 பழங்கால சிலைகள் கடத்தல்!
தமிழகத்தில் 1200 பழங்கால சிலைகள் கடத்தல்!
Published on

தமிழகத்தில் கடந்த 25ஆண்டுகளில் சுமார் 1,200 பழங்கால சிலைகள் கடத்தப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 

தமிழகத்தில் 1992 ஆம் ஆண்டு முதல் 2017 வரையிலான காலகட்டத்தில் சுமார் 1,200 சிலைகள் கடத்தப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இவற்றுள் 350 சிலைகள் குறித்த விவரம் இதுவரை தெரிய வரவில்லை என்றும் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் 18 சிலைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 50 சிலைகள் இருக்கும் இடம் கண்டறியப்பட்டுள்ளதாகவும் இந்து அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.

இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 36,995 கோவில்களில் 11,500 கோவில்களில் மட்டுமே சிலைகளை பாதுகாக்கத் தேவையான வசதிகள் உள்ளன. மற்ற கோவில்களிலும் சிலைகளை பாதுகாக்கத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக இந்து அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com