இரட்டை ரயில் பாதை இணைப்பு பணிகளுக்காக 11 ரயில்கள் குறிப்பிட்ட சில நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது
நெல்லை, கங்கை கொண்டான் மற்றும் கோவில்பட்டி, கடம்பூர் ரயில்பாதை பிரிவுகளில், இரட்டை ரயில் பாதை இணைப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், ரயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, திருச்சி - திருவனந்தபுரம் இடையேயான திருச்சி சிறப்பு ரயில்கள் பிப்ரவரி 19 முதல் பிப்ரவரி 28 வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
பிப்ரவரி 23 முதல் பிப்ரவரி 27 வரை நெல்லை சிறப்பு ரயில் மதுரை - திருநெல்வேலி ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. நாகர்கோவில் பகல் நேர சிறப்பு ரயில்கள் பிப்ரவரி 24 முதல் பிப்ரவரி 28 வரை நாகர்கோவில் - மதுரை ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. பிப்ரவரி 24 முதல் பிப்ரவரி 28 வரை நாகர்கோவில் - மதுரை ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
பிப்ரவரி 23 முதல் பிப்ரவரி 27 வரை பெங்களூர் - நாகர்கோவில் சிறப்பு ரயில் விருதுநகர் - நாகர்கோவில் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. பிப்ரவரி 24 முதல் பிப்ரவரி 28 வரை நாகர்கோவில் - பெங்களூர் சிறப்பு ரயில், நாகர்கோவில் - விருதுநகர் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. பிப்ரவரி 26, 27, 28 ஆகிய நாட்களில் நாகர்கோவில் - கோயம்புத்தூர் சிறப்பு ரயில், நாகர்கோவில் - மதுரை ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.