மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நடப்பாண்டில் 11,000 கோடி ரூபாய் வங்கிக்கடன் வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி பேரவையில் அறிவித்துள்ளார்.
பேரவையில் விதி எண் 110-இன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிட்டார். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 5 ஆயிரத்து 68 கோடி ரூபாய் செலவில் 25 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும் என அவர் அறிவித்தார்.
தமிழகத்தில் நீர் தேக்கங்களில் நீர் ஆவியாவதை தடுக்க 1,125 கோடி ரூபாய் செலவில் மிதக்கும் சூரியசக்தி நிலையம், ஊரகப்பகுதியில் சுத்தமான குடிநீர் கிடைக்கும் வகையில் 100 கோடி ரூபாய் செலவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் , மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சி மன்றங்களில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பாதாளசாக்கடைகள் கட்டப்படும் என முதலமைச்சர் அறிவித்தார். மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நடப்பாண்டில் 11 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடன் வழங்கப்படும், புதிதாக ஆயிரம் அங்கன்வாடி மையங்கள் கட்டப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார்.