’’பருவத்தேர்வு சரியாக எழுதவில்லை’’ - புலம்பிய 10ஆம் மாணவி எடுத்த விபரீத முடிவு

’’பருவத்தேர்வு சரியாக எழுதவில்லை’’ - புலம்பிய 10ஆம் மாணவி எடுத்த விபரீத முடிவு
’’பருவத்தேர்வு சரியாக எழுதவில்லை’’ - புலம்பிய 10ஆம் மாணவி எடுத்த விபரீத முடிவு
Published on

குளித்தலை அருகே கீழ குப்பிரெட்டிபட்டியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி தேர்வு சரியாக எழுதவில்லை என புலம்பிக்கொண்டு இருந்த நிலையில் தற்கொலை செய்துகொண்டதாக பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர்.

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சிக்குட்பட்ட கீழக்குப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த எலக்ட்ரிஷியன் முத்துக்குமாரின் மகள் லட்சுமி(15). புனவாசிப்பட்டியிலுள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று பள்ளியில் நடைபெறும் பருவத் தேர்வில் சரியாக தேர்வு எழுதவில்லை என பெற்றோர்களிடம் கூறி புலம்பிக் கொண்டிருந்ததாக பெற்றோர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் இன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சரியாக தேர்வு எழுதவில்லை என புலம்பிக் கொண்டிருந்ததால் மாணவி தூக்கிட்டு இறந்திருக்கலாம் என லாலாபேட்டை போலீசாரிடம் தெரிவித்த பெற்றோர், இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். லாலாபேட்டை போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com