ஆன்லைன் மூலமாக நடத்திய பாடம் புரியாத நிலையில் ஆசிரியர் மற்றும் பெற்றோர் திட்டியதால் மனமுடைந்த 10-ம் வகுப்பு பள்ளி மாணவன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் வசித்து வருபவர் பாண்டியன். அரசு ஒப்பந்த பணிகளை செய்து வரும் இவரின் மகன் அபிஷேக், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தார்.
ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தபட்டு வரும் நிலையில், அபிஷேக்கிற்கு ஆன்லைன் வகுப்பின் மூலமாக சொல்லி தரப்படும் பாடங்கள் புரியவில்லை எனத் தெரிகிறது. இதனால் சரிவர படிக்க முடியாமல் திணறி வந்துள்ளார்.
இந்நிலையில் ஆசிரியரும், பெற்றோரும் அபிஷேக்கினை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அபிஷேக் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆண்டிபட்டி காவல்துறையினர் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.