முதல் முறையாக தமிழில் 100க்கு 100 மதிப்பெண்.. சாதித்த திருச்செந்தூர் பள்ளி மாணவி!

முதல் முறையாக தமிழில் 100க்கு 100 மதிப்பெண்.. சாதித்த திருச்செந்தூர் பள்ளி மாணவி!
முதல் முறையாக தமிழில் 100க்கு 100 மதிப்பெண்.. சாதித்த திருச்செந்தூர் பள்ளி மாணவி!
Published on

தமிழகத்தில் முதல் முறையாக தமிழ் மொழி பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்து திருச்செந்தூர் பள்ளி மாணவி சாதனை.

தமிழ்நாடு முழுவதும் கடந்த மாதம் நடைபெற்ற 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. அதில் தமிழ் பாடத்தில் முதல் முறையாக ஒரு நூற்றுக்கு நூறு முழு மதிப்பெண் எடுத்து திருச்செந்தூரைச் சேர்ந்த மெட்ரிக் பள்ளி மாணவி சாதனைப்படைத்துள்ளார். ஆறுமுகநேரி தலைமை காவல் அதிகாரி செல்வ குமாரின் மகளான மாணவி துர்கா திருச்செந்தூரில் உள்ள காஞ்சி ஸ்ரீ சங்கரா அகாடமி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் படித்து வருகிறார்.

தமிழ் பாடத்தில் நூற்றுக்கு நூறு வாங்கிய மாணவி துர்கா, “பிற மொழிகளை விட தமிழ் மொழியில் படிப்பதே சிறப்பானது. ஆங்கிலம் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை தமிழ் மொழியில் படிக்க வைப்பதன் மூலம் போட்டி தேர்வுகளுக்கு அவர்களை தயார் செய்ய முடியும்.

மேலும், தனது பள்ளியில், ஆங்கில மொழியில் பேச வேண்டும் என்று ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தியதில்லை. தமிழ் பாடங்களை படிப்பதற்கு ஆசிரியர்கள் உறுதுணையாக இருந்தனர். வேளாண் துறை சார்ந்த படிப்புகளை படிப்பதில் ஆர்வமாக இருக்கிறேன்” என பூரிப்புடனும், உற்சாகத்துடனும் கூறியுள்ளார். தமிழ் பாடத்தில் சிறந்த மதிப்பெண்ணை பெற்ற மாணவி துர்காவுக்கு ஆசிரியர்கள், சக மாணவிகள் என பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.

முன்னதாக, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இணையதளம் மூலம் தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு, மாணவர்களின் தேர்ச்சி விவரத்தை குறுஞ்செய்தி மூலமும் அனுப்பியிருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம் பத்தாம் வகுப்பு தேர்வில் 97.22% பெற்று முதலிடத்தை பெற்றுள்ளது. அதேபோல, பெரம்பலூர், விருதுநகர், மதுரை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் முறையே, 97.15%, 95.96%, 95.96%, 94.26% என்ற விகிதத்தில் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com