9 நாள் போராட்டம்... கொரோனாவை தோற்கடித்த 100 வயது கணவரும் 92 வயது மனைவியும்..!

9 நாள் போராட்டம்... கொரோனாவை தோற்கடித்த 100 வயது கணவரும் 92 வயது மனைவியும்..!
9 நாள் போராட்டம்... கொரோனாவை தோற்கடித்த 100 வயது கணவரும் 92 வயது மனைவியும்..!
Published on

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனா பாதிப்பால் அனுமதிக்கப்பட்டிருந்த 100 வயது கணவரும் 92 வயது மனைவியும் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

சென்னை தியாகராயநகரைச் சேர்ந்தவர் வைத்தியநாதன். 100 வயதான இவருக்கு காய்ச்சல், இருமல், மூச்சுவிடுவதில் சிரமம் உள்ளிட்ட பிரச்னைகள் இருந்துள்ளது. இதையடுத்து கடந்த அக்டோபர் 4ஆம் தேதி சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து அடுத்த நாள் அவரது மனைவி ஜானகிக்கும் தொந்தரவுகள் இருந்ததால் அவரும் அதே மருத்துவமனையில் அக்டோபர் 5ம் தேதி அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து வைத்தியநாதனுக்கு முதல் நாள் மட்டும் ஆக்ஸிஜன் தேவைப்பட்டதாகவும் அவரது மனைவிக்கு 20 சதவீதம் நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் இருந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும், இருவரும் உடல்ரீதியாக மிகவும் வலிமை வாய்ந்தவர்களாக இருந்தார்கள் எனவும் அவர்களின் தேவைகளை அவர்களே பூர்த்தி செய்து கொண்டனர் எனவும் தெரிவித்தனர்.

இந்நிலையில், கிட்டதட்ட 9 நாள் சிகிச்சைக்கு பின்னர் தற்போது தம்பதிகள் இருவரும் கொரோனாவில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மேலும் வைத்தியநாதன் அக்டோபர் 2ஆம் தேதி தனது பிறந்தநாளை அங்கிருக்கும் மருத்துவர்கள், செவிலியர்களுடன் கொண்டாடினார்.

சமீபத்தில் 99 வயது மூதாட்டி ஜெயலட்சுமி என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று குணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com