கின்னஸ் சாதனை முயற்சியாக 100 ‌அடி நீள மெகா தோசை

கின்னஸ் சாதனை முயற்சியாக 100 ‌அடி நீள மெகா தோசை
கின்னஸ் சாதனை முயற்சியாக 100 ‌அடி நீள மெகா தோசை
Published on

சென்னையில் கின்னஸ் சாதனை முயற்சியாக 100 அடி நீள பிரம்மாண்ட தோசை சமையல் கலைஞர்களால் தயாரிக்கப்பட்டுள்ளது. 

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஓட்டல் ஒன்றில் சுட்ட 54 அடி நீள தோசையே தற்போது வரை கின்னஸ் சாதனையாக இருந்து வருகிறது. இந்தச் சாதனையை முறியடிக்கும் வகையில், சென்னையில் 100 அடி நீளம் கொண்ட தோசையை சமையல் கலைஞர்கள் உருவாக்கினர்.

சென்னை ஐ.ஐ.டியில் நடைபெற்ற இந்த கின்னஸ் சாதனை முயற்சியில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர். சமையல் கலை நிபுணர் வினோத் தலைமையில் சரவணபவன் சமையல் கலைஞர்கள் 50 பேரின் கைவண்ணத்தில் இந்த கின்னஸ் சாதனை முயற்சி நிறைவேற்றப்பட்டது.

இதற்காக 7 டன் எடை கொண்ட தோசை கல்லில், 40 கிலோ மாவை கொண்டு, 27 கிலோ எடை கொண்ட பிரமாண்ட தோசை 100 அடி நீளத்தில் தயாரிக்கப்பட்டது. 

தோசையை தயாரிப்பதற்கு முன், சமையல் கலை நிபுணர் வினோத்குமார் சமையல் கலைஞர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். பின்னர் தோசைக் கல்லை பற்றவைத்து, சமையல் கலைஞர்கள் நெய் ஊற்றி கல்லை பதப்படுத்தினர். தொடர்ந்து தோசைக் கல்லில் மாவு ஊற்றப்பட்டு பிரத்தியேக கருவி மூலம் மாவு விரிக்கப்பட்டது. தோசை வெந்த பிறகு 50 சமையல் கலைஞர்களும் ஒரே நேரத்தில் தோசையை பக்குவமாக சுருட்டி எடுத்தனர்.

பிரமாண்ட தோசையை ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்டில் பதிவு செய்தனர். கின்னஸ் புக் ஆஃப் ரெக்கார்டில் இந்த 100 அடி தோசை இடம்பெற உள்ளது. இந்தச் சாதனை நிகழ்வை ஏராளமானோர் பார்த்து ரசித்தனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com