“ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்”- கருணாஸ்

“ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்”- கருணாஸ்
“ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்”- கருணாஸ்
Published on

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொண்ட எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் திருநீறு பூச மறுத்து ஒட்டுமொத்த முக்குலத்தோர் சமூகத்தையும் இழிவுப்படுத்தி விட்டார் என்றும் அதற்கு உடனடியாக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் சட்டமன்ற உறுப்பினரும், முக்குலத்தோர் புலிப்படையின் தலைவருமான கருணாஸ் தெரிவித்துள்ளார். 


கோவை அவிநாசி சாலையில் உள்ள ஓட்டலில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது... திமுக கட்சியின் தாய் கழகமான திராவிட கட்சியின் தலைவரான பெரியாரால் போற்றப்பட்டவர் முத்துராமலிங்க தேவர். நாத்திகவாதியான பெரியார் 1968ல் குன்றக்குடி அடிகளார் திருநீறு பூசுகையில், அதை ஏற்றுக்கொண்டதுடன், மரியாதையாக செலுத்தப்பட்டதை அவமதிப்பது நாகரீகமாக இருக்காது, மனித பண்பாக இருக்காது என ஆணித்தரமாக சொன்னதாக சுட்டிக்காட்டியவர். அதிலிருந்து வந்த திமுக கட்சியின் தலைவரான ஸ்டாலின் ஒன்று நாத்தீகராக அல்லது ஆத்தீகராக இருக்க வேண்டும். இஸ்லாமியர்கள் அணிவிக்கும் புனிதமான குல்லாவை ஏற்கும் நிலையில், திருநீறை உதாசீனப்படுத்தியது முத்துராமலிங்க தேவரை இழிவுப்படுத்தி விட்டதாக குற்றச்சாட்டினார்.

இதற்கு வருத்தம் தெரிவிக்கவில்லை என்றால் முக்குலத்தோர் சார்பில் தமிழகம் முழுதும் போராட்டம் நடத்தப்பட வேண்டும் என்றவர், ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு சடங்கு உள்ளதை ஏற்றுக்கொள்பவராக இருக்க வேண்டும் என்றும், பெருத்த சமூகத்தின் உணர்வுகளை ஸ்டாலின் புரிந்துக் கொள்ள வேண்டும் என்றார். தொடர்ந்து பேசியவர், சசிகலாவிற்கு அரணாக இருப்போம் என்றும், வந்தால் சந்திப்பேன் என்றார்.


மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயரை வைப்பதோடு நாடாளுமன்றத்தில் மருத பாண்டியர் சிலையை வைக்க வேண்டும் என்றார். மேலும், 68 சமூகங்களை சேர்ந்த சீர்மரபினர் தொடர்பாக கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு நிதி ஒதுக்கி உள்ளதை நடைமுறைப்படுத்த வேண்டும்,

தேர்தல் நேரத்தில் கூடுதல் இடங்கள் கேட்கப்படும் என்றும், அதிமுகவில் இடங்கள் ஒதுக்கப்படவில்லை என்றாலும் கூட்டணியில் இருப்பீர்களா என்ற கேள்விக்கு, இடங்கள் கொடுக்காமல் எப்படி ஆதரிக்க முடியும்? என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com