சேலத்தில் அரசுக் கலைக்கல்லூரி வளாகத்தில் உள்ள கிணற்றில் மூழ்கி 10 வயது சிறுவன் உயிரிழந்தான்.
சேலம் மரவனேரி பகுதியில் உள்ள அரசுக் கலைக்கல்லூரி வளாகத்தின் ஒரு பகுதியில் மாணவர்களுக்கான விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் பின்புறத்தில் பெரிய அளவிலான கிணறு உள்ளது. இந்தக் கிணற்றில் மீன் பிடிக்க கல்லூரியின் மதில் சுவரை ஏறிகுதித்து வந்த சிபிகேசவன் என்ற 10 வயது சிறுவன், கிணற்றில் மீன்பிடிக்க முயற்சி செய்துகொண்டிருந்தார்.
அப்போது திடீரென்று தவறி கிணற்றில் விழுந்துள்ளார். இந்த விபத்தில் சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றில் இருந்து சிறுவனின் சடலத்தை மீட்டனர். பின்னர் அஸ்தம்பட்டி போலீசார், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.