வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீட்டுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி, கடந்த பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில், தற்காலிக சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதைஎதிர்த்து நிலக்கோட்டையைச் சேர்ந்த விஜயக்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடந்திருந்தார்.