தமிழகத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் தமிழர்களுக்கே 90 சதவீத வேலை வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்தி திருச்சியில் தமிழ்த் தேசிய பேரியக்கம் தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறது.
பெ. மணியரசன்
பொன்மலையில் ஏழாம் நாளில் நிறைவடைந்த மறியல் போராட்டத்தில் பேசிய பெ . மணியரசன், “தமிழ்நாட்டிற்குள் தொடர்ந்து குடியேறிவரும் வெளிமாநிலத்தவர்க்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தை நாம் நடத்தவேண்டும்" என்று தெரிவித்தார்.
"தமிழ்நாடெங்கும் உள்ள இந்திய அரசு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் தமிழர்களுக்கே 90 விழுக்காடு வேலை வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசு இதை உறுதி செய்ய தனிச்சட்டம் இயற்ற வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராடுவோம்" என்றும் மணியரசன் குறிப்பிட்டார்.
தமிழ்நாடு அமைக்கப்பட்ட நவம்பர் 1 ம் தேதியன்று தமிழ்நாடு நாள் தொடங்கி, இந்த ஒத்துழையாமை இயக்கத்தை ஊர்தோறும் நடத்த தமிழ்த் தேசிய பேரியக்கம் முடிவெடுத்துள்ளது.