'வேண்டாம் CAA,NRC' என திமுக தலைவர் ஸ்டாலின் வீட்டுவாசலில் கோலம் போடப்பட்டுள்ளது
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சென்னை
பெசன்ட் நகரில் நேற்று, CAAக்கு எதிர்ப்பு தெரிவித்து கோலம் போடும் போராட்டத்தில் சிலர் ஈடுபட்டனர். முன் அனுமதியின்றி போராட்டத்தில்
ஈடுபட்டதாக 8 பேரை தடுத்து நிறுத்தி, போலீஸ் வாகனத்தில் அழைத்துச் சென்ற காவலர்கள் பின்னர் விடுவித்தனர்.
பின்னர் கோலம் போடும் போராட்டம் பல இடங்களிலும் பரவியது. பலரும் தங்கள் வீடுகளின் வாசலிலேயே CAA எதிர்ப்பு கோலம் போட்டு சமூக வலைதளங்களில் பரப்பினர்.
திமுக எம்பி கனிமொழி வீட்டிலும் நேற்று CAA எதிர்ப்பு கோலம் போடப்பட்டது. இந்நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு எதிராக ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலின் வீட்டுவாசலில் இன்று காலை கோலம் போடப்பட்டிருந்தது. ‘வேண்டாம் CAA, NRC’ என மு.க.ஸ்டாலினின் வீட்டுவாசலில் கோலம் போடப்பட்டுள்ளது. அதேபோல்,
கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி வீட்டிலும், திமுக எம்பி கனிமொழி வீட்டிலும் ‘வேண்டாம் CAA, NRC’ என கோலம் போடப்பட்டிருந்தது.