"அதிகாரம், பண பலத்திற்கு முன்னால் யாராலும் தாக்கு பிடிக்க முடியாது" - ராகுல் காந்தி

"அதிகாரம், பண பலத்திற்கு முன்னால் யாராலும் தாக்கு பிடிக்க முடியாது" - ராகுல் காந்தி
"அதிகாரம், பண பலத்திற்கு முன்னால் யாராலும் தாக்கு பிடிக்க முடியாது" - ராகுல் காந்தி
Published on

காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் ராஜினாமா செய்வதற்கு அதிகார பலமும், பண பலமுமே பிரதான காரணம் என அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

தேர்தல் பரப்புரைக்காக 3 நாள் பயணமாக டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் ராகுல்காந்தி திருவனந்தபுரம் சென்றார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி வந்த அவருக்கு, காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், தூத்துக்குடி வஉசி கல்லூரி கூட்ட அரங்கில் கட்சியின் வழக்கறிஞர்களுடன் கலந்துரையாடிய அவர், இந்தியாவில் ஜனநாயகம் மெல்ல மெல்ல மடிந்துக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

நாடாளுமன்றம், நீதிமன்றம், ஊடகம் என அனைத்து ஜனநாயக தூண்களையும் ஆர்.எஸ்.எஸ். என்ற ஒற்றை அமைப்பு கைக்குள் வைத்திருப்பதாகச் சாடினார். மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், கோவா, ஜார்கண்ட், அருணாச்சல பிரசேதம், புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது குறித்த வழக்கறிஞரின் கேள்விக்கு பதில் அளித்த ராகுல்காந்தி, பண பலம், அதிகார பலத்திற்கு முன்னாள் எந்த எம்எல்ஏ-க்களாலும் தாக்குபிடிக்க முடியாத நிலை இருப்பதாக குறிப்பிட்டார். உண்மையான விசுவாசத்துடன் பணியாற்றினால் எம்.எல்.ஏக்களை யாராலும் விலைகொடுத்து வாங்க முடியாது என்றும் பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com