"மதுரையில் பென்னிகுயிக் வசித்தது குறித்து எதுவும் தெரியாது" - கொள்ளுப்பேரன் நேர்காணல்

"மதுரையில் பென்னிகுயிக் வசித்தது குறித்து எதுவும் தெரியாது" - கொள்ளுப்பேரன் நேர்காணல்
"மதுரையில் பென்னிகுயிக் வசித்தது குறித்து எதுவும் தெரியாது" - கொள்ளுப்பேரன் நேர்காணல்
Published on

முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் மதுரையில் நூலகத்தை கட்டவுள்ள தமிழக அரசு, முல்லைப் பெரியாறு அணையை கட்டிய கர்னல் பென்னிகுயிக் வாழ்ந்த இல்லத்தை அதற்காக இடித்து கட்டுவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

இதை தமிழக அரசு மறுத்துள்ள நிலையில், பென்னி குவிக்கின் கொள்ளுப்பேரன் முறை உறவினரும், இங்கிலாந்தில் வசிப்பவருமான டாம் கிப்ஸ் உடன் காணொலி முறையில் நமது செய்தியாளர் ஜெனிஃபர் நடத்திய உரையாடலைப் பார்க்கலாம்.

கேள்வி: டாம், உங்கள் தாத்தா ஜான் பென்னிகுயிக் மதுரையில் தங்கியிருந்த வீட்டை இடித்துவிட்டு நூலகம் கட்டப்படுவதாக ஒரு சர்ச்சை உள்ளது. அந்த வீட்டில் பென்னிகுயிக் வசித்தாரா என்பது பற்றி நீங்கள் ஏதேனும் அறிந்துள்ளீர்களா?

பதில்: மதுரையில் பென்னிகுயிக் வசித்தாரா.இல்லையா என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. பெரும்பாலான காலம் தன் வாழ்க்கையை அவர் தமிழகத்தலேயே கழித்தார். அணை கட்டுமானப் பணியில் ஆர்வம் காட்டினார். அங்குள்ள மக்களுடன் அவர் நெருங்கிப் பழகினார்

கேள்வி: மதுரையில் கட்டடத்தை இடித்துவிட்டு நூலகம் கட்டப்படுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: எப்போதுமே நூலகம் கட்டுவது சிறந்தது. தனிப்பட்ட முறையில் இதைச் சொல்கிறேன். எனக்கு கல்வி மீது மிகுந்த ஆர்வம் உண்டு. புத்தகங்களும் அறிவும் எளிதில் எட்டும் வகையில் இருப்பது எதிர்காலத்திற்கு நல்லது. பென்னிகுயிக்கும் கல்வி கற்பித்தார். அவர் பெயரில் அங்கு பொறியியல் கல்லூரி ஒன்று இருப்பதாகவும் அறிந்தேன்.

கேள்வி: கருணாநிதி பெயரில் நூலகம் அமைவது பற்றி என்ன கருதுகிறீர்கள்?

நூலகத்திற்கு என்ன பெயர் வைப்பது என்பது தமிழக மக்கள், மதுரை மக்களின் விருப்பம். நூலகத்திற்கு பெயர் வைப்பது குறித்து எனக்கு எந்த ஒரு வலுவான கருத்தும் இல்லை. என்னைப் பொறுத்தவரை அங்கு நூலகம் அமைகிறது என்பதுதான் முக்கியம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com