‘பொதுமுடக்கம், தொழிற்சாலைகள், கடைகள் மூடல்’: தமிழகத்தில் வெகுவாக குறைந்த மின்நுகர்வு

‘பொதுமுடக்கம், தொழிற்சாலைகள், கடைகள் மூடல்’: தமிழகத்தில் வெகுவாக குறைந்த மின்நுகர்வு
‘பொதுமுடக்கம், தொழிற்சாலைகள், கடைகள் மூடல்’: தமிழகத்தில் வெகுவாக குறைந்த மின்நுகர்வு
Published on

பொதுமுடக்கம் உள்ளிட்ட காரணிகளால் தமிழகத்தில் கடந்த நிதி ஆண்டில் தமிழகத்தில் மின் நுகர்வு 7.02 சதவீதம் குறைந்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் இந்தியா முழுவதும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. அனைத்துத் தொழிற்சாலைகள், பெரிய கடைகள் மூடப்பட்ட நிலையில், தமிழகத்தில் மின் நுகர்வு வெகுவாக குறைந்தது. குறிப்பாக ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலத்தில், தமிழகத்தில் மின் நுகர்வு, அதற்கு முந்தைய ஆண்டைவிட 16 சதவிகிதம் குறைந்தது.

2018-19 ஆம் ஆண்டில் இந்த 4 மாதங்களில் 27 ஆயிரத்து 706 மில்லியன் யூனிட்டாக இருந்த மின்நுகர்வு, கடந்த ஆண்டு 23 ஆயிரத்து 149 மில்லியன் யூனிட்டாக குறைந்தது. ஒட்டுமொத்தத்தில் 2020-2021 ஆம் நிதி ஆண்டில் தமிழகத்தின் மின் நுகர்வு ஒரு லட்சத்து ஆயிரம் மில்லியன் யூனிட்டாக இருந்துள்ளது. இதுவே கடந்த 2019-20 ஆம் நிதியாண்டில், தமிழகத்தின் மின்நுகர்வு ஒரு லட்சத்து 8 ஆயிரம் மில்லியன் யூனிட்டாக இருந்தது.

மின்நுகர்வு குறைந்த நிலையில், தமிழ்நாடு மின்வாரியத்தின் வருமானமும் குறைந்துள்ளது. பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட முதல் 3 மாதங்களில் குறைந்தழுத்த மின்சாரம் பயன்படுத்தும் மின் நுகர்வோரிடமிருந்து மூவாயிரத்து 775 கோடி ரூபாய் மட்டுமே வருமானம் கிடைத்துள்ளது. இதுவே முந்தைய ஆண்டில் 6 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. பொதுமுடக்கம் தவிர, பல புயல்கள் தமிழகத்தை தாக்கிய நிலையில், வெப்பம் குறைந்து ஏசி உள்ளிட்டவைகளின் பயன்பாடு குறைந்ததாலும், மின்நுகர்வு குறைந்துள்ளதாகக் தெரிகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com