மேட்டுப்பட்டி புனித வியாகுல அன்னை தேவாலயத்தில் நடைபெற்ற 331-ஆம் ஆண்டு பாஸ்கு விழா

மேட்டுப்பட்டி புனித வியாகுல அன்னை தேவாலயத்தில் நடைபெற்ற 331-ஆம் ஆண்டு பாஸ்கு விழா
மேட்டுப்பட்டி புனித வியாகுல அன்னை தேவாலயத்தில் நடைபெற்ற 331-ஆம் ஆண்டு பாஸ்கு விழா
Published on

மேட்டுப்பட்டி புனித வியாகுல அன்னை ஆலயத்தில், 331-ஆம் ஆண்டு பாஸ்கு திருவிழா நடைபெற்றது. தூம்பா ஊர்வலத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இறைமக்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான ஈஸ்டர் பண்டிகை கடந்த வாரம் அனைவராலும் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக 96 பட்டிகளின் தாய் கிராமமாக விளங்கும் திண்டுக்கல் மேட்டுப்பட்டி புனித வியாகுல அன்னை ஆலயத்தில் 331-ஆம் ஆண்டு பாஸ்கு திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

முதல் நாளான இன்று இயேசுவின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் விதமாக அன்றைய காலக்கட்டத்தில் இருந்த மனிதர்களைபோல் வேடமணிந்து தத்ரூபமாக நடித்து காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை காண்பதற்காக மேட்டுப்பட்டி, வேடபட்டி, பள்ளப்பட்டி, பஞ்சம்பட்டி, சின்னாளபட்டி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டுகளித்தனர்.

இதனைத்தொடர்ந்து உயிர் நீத்த இயேசுவின் திருவுடலை பூக்கள் மற்றும் பழங்களால் அலங்கரிக்கப்பட்ட தூங்காவில் வைத்து, ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறைமக்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாகச் சென்றனர். இறந்த இயேசுவின் திரு உடலுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இன்று மாலை பேய்களின் பாஸ்காவும் பின்னர் மூன்றாம் நாள் உயிர்த்த ஆண்டவராக காட்சியளிக்கும் நிகழ்வும் நடைபெற உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com