ஜிம்பாப்வே டெஸ்ட்… இலங்கை அணி சாதனை வெற்றி

ஜிம்பாப்வே டெஸ்ட்… இலங்கை அணி சாதனை வெற்றி
ஜிம்பாப்வே டெஸ்ட்… இலங்கை அணி சாதனை வெற்றி
Published on

ஜிம்பாப்வே அணிக்கெதிரான கொழும்பு டெஸ்டில் இலங்கை அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

ஜிம்பாப்வே அணி நிர்ணயித்த 388 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் குவித்திருந்தது. ஐந்தாவது நாள் ஆட்டத்தைத் தொடங்கிய இலங்கை அணி, குஷால் மெண்டிஸ் மற்றும் மேத்யூஸ் ஆகியோரின் விக்கெட்டுகளை விரைவில் இழந்தது. மெண்டிஸ் 66 ரன்களிலும், மேத்யூஸ் 25 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 203 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இலங்கை அணியை, டிக்வெல்லா மற்றும் குணரத்னா ஜோடி சரிவிலிருந்து மீட்டது.

இந்த ஜோடி 6ஆவது விக்கெட்டுக்கு 121 ரன்கள் குவித்தது. டிக்வெல்லா 81 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர்களின் சிறப்பான ஆட்டத்தால் இலங்கை அணி, 114.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து ஜிம்பாப்வே அணி நிர்ணயித்த இலக்கை இலங்கை அணி எட்டியது. குணரத்னா 80 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதன்மூலம் ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரையும் இலங்கை அணி வென்றது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குணரத்னே ஆட்டநாயகனாகவும், 11 விக்கெட்டுகளை வீழ்த்திய ரங்கனா ஹெராத் தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டனர். ஆசியக் கண்டத்தில் டெஸ்ட் போட்டியின் 4ஆவது இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவித்த அணிகள் பட்டியலில் இலங்கை அணி முதலிடம் பிடித்தது. இதற்கு முன்பாக இங்கிலாந்து அணிக்கெதிராக சென்னையில் கடந்த 2008ம் ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி குவித்த 387 ரன்களே சாதனையாக இருந்து வந்தது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com