ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர்கள் பட்டியலில் இம்ரான் தாஹிரின் சாதனையை சமன் செய்தார் ராஜஸ்தான் வீரர் யஸ்வேந்திர சாஹல்
ஐபிஎல் 2022 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக யஸ்வேந்திர சாஹல் விளையாடி வருகிறார். லெக்-ஸ்பின்னரான இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற தங்கள் அணியின் கடைசி லீக் போட்டியில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அம்பதி ராயுடு மற்றும் சென்னை கேப்டன் தோனியை வெளியேற்றி அந்த அணியின் ஸ்கோரை மட்டுப்படுத்த உதவினார்.
இந்த இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் பட்டியலில் முதலிடத்தில் இருந்த தென்னாப்பிரிக்க வீரர் இம்ரான் தாஹிரின் சாதனையை சாஹல் சமன் செய்தார். 2019 ஐபிஎல் தொடரில், சிஎஸ்கே அணிக்காக விளையாடிய தாஹிர், 17 போட்டிகளில் 26 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
நடப்பு சீசனில் சாஹல் தற்போது 26 விக்கெட்டுகளுடன் பர்பிள் கேப் பந்தயத்தில் முன்னணியில் உள்ளார். ராஜஸ்தான் அணி ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் 2வது இடத்தைப் பிடித்து பிளே ஆஃப்களுக்கு தகுதி பெற்று விட்டதால் மேலும் விக்கெட்டுகளை வீழ்த்தி தாஹிரின் சாதனையை முறியடிக்கத் தயாராக இருக்கிறார் சஹால்.
வீரர்கள் | போட்டிகள் | ஓவர்கள் | விக்கெட்டுகள் | ஆண்டு |
யஸ்வேந்திர சஹால் | 14 | 56.0 | 26 | 2022 |
இம்ரான் தாஹிர் | 17 | 64.2 | 26 | 2019 |
சுனில் நரைன் | 15 | 59.1 | 24 | 2012 |
வனிந்து ஹசரங்கா | 14 | 49.0 | 24 | 2022 |
ஹர்பஜன் சிங் | 19 | 70.0 | 24 | 2013 |