சக வீரர்களுக்கு என்ன செய்துவிட்டார் தோனி ? - யுவராஜ் சிங் தந்தை பாய்ச்சல் !

சக வீரர்களுக்கு என்ன செய்துவிட்டார் தோனி ? - யுவராஜ் சிங் தந்தை பாய்ச்சல் !
சக வீரர்களுக்கு என்ன செய்துவிட்டார் தோனி ?  - யுவராஜ் சிங் தந்தை பாய்ச்சல் !
Published on

இத்தனை ஆண்டுக்காலம் கிரிக்கெட்டிலிருந்து கொண்டு சக வீரர்களுக்கு என்ன நன்மையைச் செய்துவிட்டார் தோனி என யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் கடுமையாகப் பேசியுள்ளார்.

பாலிவுட் நடிகரான யோக்ராஜ் சிங் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி மீது பல ஆண்டுகளாகக் கடுமையான விமர்சனங்களை முன் வைத்துப் பேசி வருகிறார். அண்மையில் இணையதளம் ஒன்றுக்குப் பேட்டியளித்த அவர் "கோலி, தோனியுடன் சேர்ந்து தேர்வுக்குழுவினரும் யுவராஜை ஓரங்கட்டிவிட்டனர். சமீபத்தில் ரவி சாஸ்திரியைச் சந்தித்தேன். அவர் என்னுடன் போட்டோ எடுத்துக்கொண்டார். அப்போது அவரிடம் சிறந்த வீரர்களை உரிய மரியாதையுடன் வழியனுப்ப வேண்டும் எனத் தெரிவித்தேன். தோனி, கோலி, ரோஹித் ஓய்வு பெறும் போது, அவர்களுக்கு உரிய மரியாதையுடன் வழியனுப்ப வேண்டும். அவர்கள் இந்திய கிரிக்கெட் விளையாட்டிற்காகப் பல விஷயங்கள் செய்துள்ளனர். ஆனால் பலர் யுவராஜ் சிங்கை ஒதுக்கிவிட்டனர்" எனத் தெரிவித்தார்.

இப்போது மீண்டும் பேட்டியளித்துள்ள யோக்ராஜ் சிங் "இத்தனை ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் இருக்கும் தோனி, சக வீரர்களுக்காக என்ன செய்துவிட்டார். சவுரவ் கங்குலி இப்போது மிக உயரமான பொறுப்பில் இருக்கிறார். பிசிசிஐ தலைவராக இருக்கிறார். ஏனென்றால் அவர் சக வீரர்களுக்கு உதவியுள்ளார். கிரிக்கெட்டுக்காக மட்டுமல்லாமல் நாட்டுக்காகவும் நிறையச் செய்திருக்கிறார். மேலும் தான் கேப்டனாக இருந்தபோது பல வீரர்களுக்கு உதவியுள்ளார். அதுதான் அவர் உயர்வுக்குக் காரணம்" எனக் கூறியுள்ளார்.

மேலும் தொடர்ந்த அவர் "இந்தியா உருவாக்கிய மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர் தோனி. அவர் செய்த சாதனைகள் கொஞ்சமல்ல. ஆனால் இந்திய கிரிக்கெட்டில் இன்னும் பாகுபாடு இருக்கிறது. அணியில் ஒருவர் நீடிக்க வேண்டுமென்றால் கால்களைப் பிடிக்க வேண்டியது இருக்கிறது. பிசிசிஐ-யில் இருக்கும் உயர் அதிகாரிகளுக்குச் சலாம் போட்டு தாங்கள் நினைப்பதைச் சாதித்துவிடுகிறார்கள் இப்போதுள்ள வீரர்கள். இந்தக் கலாச்சாரம் முதலில் ஒழிய வேண்டும்" என்றார் யோக்ராஜ் சிங்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com