டெஸ்ட் விக்கெட்: 82 வருட சாதனையை முறியடித்தார் யாஷிர் ஷா!

டெஸ்ட் விக்கெட்: 82 வருட சாதனையை முறியடித்தார் யாஷிர் ஷா!
டெஸ்ட் விக்கெட்: 82 வருட சாதனையை முறியடித்தார் யாஷிர் ஷா!
Published on

பாகிஸ்தான் சுழற் பந்துவீச்சாளர் யாசிர் ஷா, டெஸ்ட் போட்டியில் வேகமாக 200 விக்கெட் எடுத்து சாதனை படைத்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இப்போது விளையாடி வருகிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடக்கும் இந்த தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் நியூசி லாந்து அணி 274 ரன்களும் பாகிஸ்தான் 348 ரன்களும் எடுத்தன. இப்போது நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. 

இந்தப் போட்டியின் போது பாகிஸ்தான் சுழல்பந்துவீச்சாளர் யாசிர் ஷா, லாதம் விக்கெட்டை நேற்று வீழ்த்தினார். இதையடுத்து டெஸ்ட் கிரிக் கெட்டில் அவர் 199 விக்கெட்டுகளை சாய்த்திருந்தார். இன்னொரு விக்கெட்டை எடுத்தால் அவர் அதிவேகமாக 200 விக்கெட்டை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அந்தச் சாதனையை அவர் இன்று படைத்தார். சோமர்வில்லேவின் விக்கெட்டை வீழ்த்தியதை அடுத்து அவர் இச்சாதனையை புரிந்தார். இவர் 33 டெஸ்ட் போட்டிகளில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

82 வருடத்துக்கு முன், 1938-ல் ஆஸ்திரேலிய வீரர் கிரிம்மெட், 36 வது டெஸ்ட்டில் இந்த இலக்கை எட்டி முதலிடத்தில் இருந்தார். அவரை பின்னுக்குத் தள்ளியிருக்கிறார் யாசிர் ஷா. அடுத்த இடத்தில் அஸ்வின் (37 டெஸ்ட்) இருக்கிறார். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com