சிங்கப்பூரில் நடைபெற்று வரும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பிரான்சின் கரோலின் கார்சியா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
உலக சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடரின் எட்டாம் நிலை வீராங்கனையான கார்சியா கடைசி லீக் போட்டியில் ஏற்கனவே அரையிறுதியை உறுதி செய்திருந்த டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கியுடன் பலப்பரீட்சை நடத்தினார். முதல் செட்டை 0-6 என இழந்த வோஸ்னியாக்கி, அடுத்த 2 செட்களை 6-3, 7-5 எனக் கைப்பற்றினார். அரையிறுதியில் கார்சியா அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸை எதிர்கொள்கிறார்.
தொடரின் மற்றொரு போட்டியில் உலகின் முதல் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சிமோனா ஹாலெப் லீக் சுற்றுடன் வெளியேறினார். ஹாலெப் தனது கடைசி லீக் ஆட்டத்தில், ஏற்கெனவே அரையிறுதி வாய்ப்பை இழந்திருந்த உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினாவை எதிர்கொண்டார். 71 நிமிடங்கள் நடந்த போட்டியில் சிமோனா ஹாலெப்பை 6-3, 6-4 என்ற நேர் செட்களில் எலினா எளிதில் வென்றார். தொடர்ச்சியாக 2 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்ததால் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை சிமோனா இழந்தார்.