"தோனி ஓய்வுப்பெறாமல் இருந்திருந்தால் பாகிஸ்தானுக்கு கேப்டனாக்கியிருப்பேன்" - யாஸிர் அராபத்

"தோனி ஓய்வுப்பெறாமல் இருந்திருந்தால் பாகிஸ்தானுக்கு கேப்டனாக்கியிருப்பேன்" - யாஸிர் அராபத்
"தோனி ஓய்வுப்பெறாமல் இருந்திருந்தால் பாகிஸ்தானுக்கு கேப்டனாக்கியிருப்பேன்" - யாஸிர் அராபத்
Published on

தோனி ஓய்வுப்பெறாமல் இருந்திருந்தால் பாகிஸ்தானுக்கு கேப்டனாக்கியிருப்பேன் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யாசிர் அராபத் தெரிவித்துள்ளார்.

"ஸ்போர்ட்ஸ் யாரி" ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ள யாசிர் அராபத் "தோனி இப்போது விளையாடுவதில்லை. ஒருவேளை அவர் விளையாடிக்கொண்டு இருந்திருந்தால் அவரை பாகிஸ்தான் அணிக்கு கேப்டனாக்கியிருப்பேன். இப்போதுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு தோனி போன்ற அட்டகாசமான கேப்டன்தான் தேவைப்படுகிறார். தோனிக்கு திறமையை எப்படி சரியாக பயன்படுத்துவது என்று தெரியும். எங்களது வீரர்கள் திறமையானவர்கள்தான் ஆனால் அவர்களை வழிநடத்த தோனி போன்ற திறமை வாய்ந்த தலைவன் தேவை" என்றார்.

மேலும் பேசிய அவர், "ஷோயப் அக்தர் சொல்வார் எப்போதெல்லாம் நான் பவுலிங் போட்டிருக்கிறேனோ அந்தப் பந்துகளை எல்லாம் அவர் அடிப்பார் என நினைத்துக் கூட பார்த்ததில்லை என்று. அந்தளவுக்கு தோனி மனதளவிலும் உடல் அளவிலும் மிகவும் வலிமையானவர். தோனிக்கு முன்பு 90களில் மைக்கல் பெவன் என்ற வீரர் இருந்தார். அவரின் ஒருநாள் போட்டி ஆவரெஜ் 50 க்கும் மேல். அத்தகைய ஆவரேஜை தோனியும் வைத்திருக்கிறார். எனக்கு தெரிந்து இப்போதுள்ள வீரர்கள் ஒருவர் கூட பினிஷிங் விஷயத்தில் தோனியை நெருங்க முடியாது" என்றார் யாசிர் அராபத்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com