இந்தியாவை 27 ஆண்டுகளாய் வெல்ல முடியாத வெஸ்ட் இண்டீஸ் !

இந்தியாவை 27 ஆண்டுகளாய் வெல்ல முடியாத வெஸ்ட் இண்டீஸ் !
இந்தியாவை 27 ஆண்டுகளாய் வெல்ல முடியாத வெஸ்ட் இண்டீஸ் !
Published on

உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியாவை கடைசியாக 1992 ஆம் ஆண்டுதான் வெஸ்ட் இண்டீஸ் வீழ்த்தியது. அதன் பின் 27 ஆண்டுகளாய் வெஸ்ட் இண்டீஸ் அணியால் இந்தியாவை வெற்றிக்கொள்ள முடியவில்லை. உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 34 வது லீக் போட்டி மான்செஸ்டரில் இன்று நடக்கிறது. இதில், இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.  நடப்பு தொடரில் இந்திய அணி, இதுவரை தோல்வியை சந்திக்கவில்லை. 9 புள்ளியுடன் 3-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, இன்றைய ஆட்டத்தில் வென்றால் அரை இறுதி வாய்ப்பு உறுதியாகி விடும்.

இந்நிலையில் இவ்விறு அணிகளும் உலகக் கோப்பையில் இதுவரை 8 முறை மோதியுள்ளன. அதில் இந்தியாதான் அதிகப் போட்டியில் வெற்றிப் பெற்றுள்ளது. ஆம் இந்தியா 5 முறையும் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 முறையும் வெற்றிப் பெற்றுள்ளது. உலகக் கோப்பையின் ஆரம்ப காலக்கட்டத்தில் இருந்து இப்போது வரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சிம்ம சொப்பனமாகவே திகழ்ந்து வருகிறது இந்திய அணி என்றால் அது மிகையல்ல.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா, கேப்டன் விராத் கோலி, கே.எல்.ராகுல், கேதர் ஜாதவ் ஆகியோர் ஃபார்மில் இருக்கின்றனர். இன்றைய போட்டியிலும் இவர்கள் சிறப்பாக செயல்பட்டால், இந்திய அணியின் வெற்றி எளி தாகும். பந்துவீச்சில் பும்ரா கெத்தாக பந்து வீசுகிறார். மேலும் இன்றையப் போட்டியில் காயத்தில் இருந்து மீண்டுள்ள புவனேஷ்வர் குமார் களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சாஹல், குல்தீப் என்ற ஸ்பின்னர்களும் இருக்கிறார்கள். 

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த உலகக் கோப்பையில் 6 போட்டிகளில் விளையாடி, 3 புள்ளிகள் மட்டுமே வைத்துள்ளது. அதிரடி பேட்ஸ்மேன்களை கொண்டுள்ள அந்த அணியில், சிலர் மட்டுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகின்றனர். சாய் ஹோப், பூரன், ஹெட்மையர், பிராத் வெயிட் ஆகியோர் ஃபார்மில் உள்ளனர். பந்து வீச்சில் காட்ரெல், தாமஸ், ஆல்ரவுண்டர் பிராத்வெய்ட், கெமர் ரோச் சிறப்பாக பந்து வீசுகின்றனர். எனவே இன்றையப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை விட இந்திய அணி பலமாகவே இருக்கிறது.

1979 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டயில்தான் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் முதலில் மோதின அதில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றிப் பெற்றது. 1983 உலகக் கோப்பையின் லீக் ஆட்டத்திலும் இறுதிப் போட்டியிலும் இந்தியா வெற்றிப் பெற்றது. இடையே நடைபெற்ற மற்றொரு லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றிப் பெற்றது. 1983 உலகக் கோப்பையை கைப்பற்றி சாம்பியன் பட்டத்தையும் வென்றது. பின்பு, 1992 உலகக் கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றிப் பெற்றது. இதுதான் உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவை வெஸ்ட் இண்டீஸ் வென்ற கடைசிப் போட்டி. அதன் பின்பு 1996, 2011, 2015 உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியாவே வெற்றி வாகை சூடியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com