இறுதிப்போட்டி: டிக்கெட் கட்டணம் ரூ.14 லட்சமா? ரசிகர்கள் அதிர்ச்சி!

இறுதிப்போட்டி: டிக்கெட் கட்டணம் ரூ.14 லட்சமா? ரசிகர்கள் அதிர்ச்சி!
இறுதிப்போட்டி: டிக்கெட் கட்டணம் ரூ.14 லட்சமா? ரசிகர்கள் அதிர்ச்சி!
Published on

இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நாளை இறுதிப் போட்டி நடக்கவுள்ள நிலையில், டிக்கெட் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இங்கிலாந்தில் நடந்து வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று முடிவில் முதல் நான்கு இடங்களை பிடித்த இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. முதலாவது அரையிறுதியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் நியூசிலாந்து வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இரண்டாவது அரையிறுதியில் ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதையடுத்து நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் மோத இருக்கின்றன.

உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் 27 ஆண்டுகளுக்குப் பின் இங்கிலாந்து அணி, இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. அதுவும் சொந்த மண்ணில் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளதால், அதைக் காண உள்நாட்டு ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். 

இந்நிலையில், மக்களின் இந்த ஆர்வத்தைப் பணமாக மாற்றுவதற்கு சிலர் முயன்று வருகின்றனர். ஐசிசியின் அதிகாரபூர்வ இணையதளங்கள் மூலம் போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்கப்பட்டாலும், மறுபுறம் ஐசிசி அங்கீகரித்த முகமைகளும் டிக்கெட் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றன. 

இந்த முகமைகள் பிரீமியம் டிக்கெட்டுகளை 13.78 லட்சம் ரூபாய்க்கு விற்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக 11.76 லட்சத்துக்கு டிக்கெட்டுகள் விற்கப்படுகின்றன. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

இதற்கிடையே, டிக்கெட் மறுவிற்பனையை பொறுத்தவரை தங்களால் அங்கீகரிக்கப்பட்ட மையம் மூலமே வாங்க வேண்டும் என்றும் இல்லையென்றால் மைதானத்துக்குள் அனுமதிப்பதில் சிக்கல் ஏற்படும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எச்சரித்துள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com