உலகக் கோப்பை: முதல் போட்டியில் மல்லுகட்டும் இங்கிலாந்து-தென்னாப்பிரிக்கா!

உலகக் கோப்பை: முதல் போட்டியில் மல்லுகட்டும் இங்கிலாந்து-தென்னாப்பிரிக்கா!

உலகக் கோப்பை: முதல் போட்டியில் மல்லுகட்டும் இங்கிலாந்து-தென்னாப்பிரிக்கா!
Published on

உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழாவின் முதல் போட்டி இன்று தொடங்குகிறது. இதில் இங்கிலாந்து- தென்னாப்பிரிக்க அணிகள் மோதுகின்றன.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி, 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 12 வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. ஜூலை 14ஆம் தேதி வரை நடைபெறும் இந்த உலகக் போட்டியை இங்கிலாந்து நடத்துகிறது. இந்த போட்டியில், இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன. முதல் நாளான இன்று நடக்கும் போட்டியில் இங்கிலாந்து- தென்னாப்பிரிக்க அணிகள் மோதுகின்றன. லண்டன் ஓவல் மைதானத்தில் இந்தப் போட்டி நடக்கிறது.

கடந்த சில வருடங்களாக, இங்கிலாந்து அணி பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என மிரட்டி வருகிறது. அதனால்தான் அந்த அணி முதலிடத்தில் இருக்கிறது. அந்த அணியின் ஜாஸ் பட்லர், பேர்ஸ்டோ, கேப்டன் மோர்கன், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் அதிரடி மன்னர்களாக இருக்கிறார்கள். அதுவும் அவர்களது சொந்த ஊரில் போட்டி நடப்பதால் இன்னும் மிரட்டுவார்கள். சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த போட்டிகளில் மிக எளிதாக 300 ரன்களை கடந்துள்ளது அந்த அணி. பந்துவீச்சிலும் அந்த அணி பலமாகவே இருக்கிறது. வேகப்பந்துவீச்சாளர்கள் கிறிஸ் வோக்ஸ், ஆர்ச்சர், பிளங்கெட், சுழல் பந்துவீச்சாளர்கள் மொயின் அலி, அடில் ரஷித் ஆகியோர் எதிரணியை மிரட்டுவார்கள்

தென்னாப்பிரிக்க அணியில் கேப்டன் டு பிளிசிஸ், குயின்டான் டி காக் மட்டுமே தற்போது ஃபார்மில் உள்ளனர். டேவிட் மில்லர், டுமினி ஆகி யோர் ஃபார்மில் இல்லை. இருந்தாலும் அவர்கள் எப்போதும் விஸ்ரூபவம் எடுப்பவர்கள். அந்த அணியின் பலம் பந்துவீச்சுதான். ரபடா, இம்ரான் தாஹிர், நிகிடி உள்ளிட்டோர் சிறப்பாக ஆடுபவர்கள். மூத்த வீரர் ஸ்டெயின் காயம் காரணமாக இந்த போட்டியில் ஆடவில்லை. 

இந்த உலக கோப்பைக்கு முன்பு கடைசியாக விளையாடிய, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடர்களையும் தென்னாப்பிரிக்க அணி வென்றுள்ளது. இதனால் இன்றைய போட்டியில் அதிக பலத்துடன் விளையாடும். 

இங்கிலாந்து அணி, இதுவரை உலக கோப்பையை வென்றதில்லை என்பதால் இந்த முறையை எப்படியாவது கோப்பையை கைப்பற்றும் முயற் சியில் அந்த அணி இருக்கிறது. இதனால் இன்றைய போட்டி பரபரப்பாக இருக்கும். போட்டி பிற்பகல் 3 மணிக்குத் தொடங்குகிறது. 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com