'கோல்டன் பூட்' விருது யாருக்கு ? யார் முன்னிலை ?

'கோல்டன் பூட்' விருது யாருக்கு ? யார் முன்னிலை ?
'கோல்டன் பூட்' விருது யாருக்கு ? யார் முன்னிலை ?
Published on

ரஷ்யாவில் 21 ஆவது பிஃபா கால்பந்தாட்டப் போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்தத் தொடரில் அரையிறுதிப் போட்டிகள் நாளை தொடங்குகின்றது. அதில் பிரான்ஸ் - பெல்ஜியம், இங்கிலாந்து - குரோஷியா அணிகள் மோதுகின்றன. ஜூன் 14 ஆம் தேதி தொடங்கிய உலகக் கோப்பையில் உலகப் புகழ்பெற்ற வீரர்கள் லியோனல் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் விரைவில் போட்டியில் இருந்து வெளியேறிவிட்டனர். இதனால் இந்தாண்டு உலகக் கோப்பை போட்டியில் அதிகம் கோலடித்த வீரருக்கு கொடுக்கப்படும். "கோல்டன் பூட்" விருது யாருக்கு கொடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.

உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் 1982 ஆம் ஆண்டு கோல்டன் பூட் என அறிமுகப்படுத்தப்பட்ட இவ்விருது 2010 ஆம் ஆண்டு முதல் கோல்டன் பூட் (Golden Boot) என மாற்றம் பெற்றது. ஆனாலும் தொடர்ந்து கோல்டன் ஷூ விருது என்றே அழைக்கப்படுகிறது. மேலும் உலகக் கோப்பை தொடரில் கோலடிக்கும் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை பிடிக்கும் வீரர்களையும் தேர்வு செய்து வெள்ளி பூட் மற்றும் வெண்கல பூட் விருதுகளும் வழங்கப்படுகிறது. 

ஒன்றுக்கு மேற்பட்ட வீரர்கள் ஒரே அளவான  கோல்கள் பெற்றிருந்தால் 1994 ஆம் ஆண்டு முதல் பெனால்டி கோல்கள் நீக்கப்பட்டு கணக்கெடுக்கப்படும். அவ்வாறு பெனால்டி கோல்களும் இல்லாத நிலையில் கோல்களுக்காக வழங்கப்பட்ட உதவிகளின் (Assist) எண்ணிக்கை கணிக்டப்படும்.

அவற்றிலும் சமனாக இருக்கும் சந்தர்ப்பத்தில் குறைந்த நேரம் விளையாடிய வீரருக்கு விருது கோல்டன் பூட் வழங்கப்படும். இம்முறைமை 2006 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 2014 ஆம் ஆண்டு இவ்விருதை கொலம்பிய அணியின் நட்சத்திர வீரர் ஜேம்ஸ் ரொட்ரிகேஸ் பெற்றிருந்தார்.

இந்தாண்டு அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் இப்போதுவரை இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி கேன் 6 கோல்களுடன் முதலிடத்திலும், பெல்ஜியம் அணியின் ரோமலு லுகாகு இரண்டாம் இடத்திலும் உள்ளார். இன்னும் சில தினங்களில் யார் கோல்டன் பூட் விருதை பெறப் போகிறார்கள் என்பது தெரிந்துவிடும்.

விருது பெற்றவர்கள் விவரம்:

1982 – போலோ ரோஸி (இத்தாலி – 6 கோல்கள்)

1986 – கேரி லின்கர் (இங்கிலாந்து – 6 கோல்கள்)

1990 – சல்வாடோர் சில்லாக்கி (இத்தாலி – 6 கோல்கள்)

1994 – ஒலேக் சலென்கோ (ரஷ்யா – 6 கோல்கள்)

ஹரிஸ்டோ ஸ்டோய்கோ (பல்கேரியா – 6 கோல்கள்)

1998 – டெவோர் சூகேர் (குரோஷியா – 6 கோல்கள்)

2002 – ரொனால்டோ (பிரேசில் – 8 கோல்கள்)

2006 – மிரோஸ்லோ குளோஸ் (ஜேர்மனி – 5 கோல்கள்)

2010 – தோமஸ் முல்லர் (ஜேர்மனி – 5 கோல்கள்)

2014 – ஜேம்ஸ் ரொட்ரிகேஸ் (கொலம்பியா – 6 கோல்கள்)

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com