தாய்லாந்தை வெறும் 37 ரன்களில் சுருட்டி இந்திய மகளிர் அணி அபார வெற்றி!

தாய்லாந்தை வெறும் 37 ரன்களில் சுருட்டி இந்திய மகளிர் அணி அபார வெற்றி!
தாய்லாந்தை வெறும் 37 ரன்களில் சுருட்டி இந்திய மகளிர் அணி அபார வெற்றி!
Published on

மகளிருக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றையப் போட்டியில் தாய்லாந்து அணியை 37 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆக்கி இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது.

மகளிருக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 19வது லீக் ஆட்டத்தில் தாய்லாந்து அணியை இந்திய அணி எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஸ்மிரிதி மந்தனா பவுலிங்கை தேர்வு செய்தார். நிதானமாக விளையாடத்துவங்கிய தாய்லாந்து அணியின் ஓப்பனிங் கூட்டணியை பிரித்தார் தீப்தி சர்மா. நத்தகன் சாந்தமை அவர் கிளீன் போல்டாக்கி வெளியேற்ற, அடுத்து வந்த சாய்வாயும் ரன் அவுட்டாகி விக்கெட் வீழ்ச்சியை துவக்கி வைத்தார்.

பின்னர் ஸ்நே ரானாவின் பந்துவீச்சில் சிக்கி தாய்லாந்து அணியின் 3 வீராங்கனைகள் தொடர்ச்சியாக தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுக்க நிலைகுலைந்து போனது அந்த அணி. பின்னர் கயக்வாட் மற்றும் மேக்னா சிங் ஆகியோரும் தங்கள் பங்குக்கு விக்கெட்டுகளை வீழ்த்த 37 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது தாய்லாந்து அணி. இந்திய அணி தரப்பில் ஸ்நே ரானா 3 விக்கெட்டுகளையும், தீப்தி ஷர்மா மற்றும் கயக்வாட் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர் 38 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி நிதானமாக விளையாடத் துவங்கியது. சஃபாலி வர்மா 8 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்த போதிலும், மேக்னா மற்றும் பூஜா இணை நிதானித்து விளையாடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். பவர்பிளே ஓவருக்குள் இலக்கை எட்டி 14 ஓவர்களை மீதம் வைத்து இலக்கை எட்டி 9 வித்தியாசத்தில் அபார வெற்றியை ருசித்தது இந்திய அணி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com