அமீரகத்தில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் தொடரில் 11 ஆட்டங்களில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெறும் மூன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்த மோசமான பர்பாமென்ஸினால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் லீக் சுற்றோடு நடையை கட்டியுள்ளது.
ஐபிஎல் வரலாற்றில் சென்னை அணி முதல் முறையாக அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறுவது இதுவே முதல் முறை.
பதிமூன்று சீசனில் பன்னிரண்டு முறை சென்னை அடுத்த சுற்றிற்கு முன்னேறி உள்ளது.
ஐபிஎல் ராஜ்ஜியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் கிங்.
இந்த முறை ஏனோ தொடர் தோல்விகளை சென்னை பெற்றது. அந்த தோல்வியிலிருந்து வெற்றி பாதைக்கு திரும்புவதற்கான மிஷன் பெயிலியர் ஆனதால் சென்னை முதல் சுற்றோடு வெளியேறியுள்ளது.
முடிந்தது முடிந்தாகிவிட்டது. இருப்பினும் மாற்று அணியின் ஆதரவாளர்களும், ரசிகர்களும் சென்னையை சமூக வலைத்தளங்களில் எள்ளி நகையாடுகின்றனர். சென்னையின் தோல்விக்காக ஒரு மாமாங்கம் காத்திருந்தது போல பங்கம் செய்கிறார்கள்.
மறுபக்கம் சென்னை சாம்பியன் அணி தான். தோற்றாலும், ஜெயித்தாலும் சென்னை தான் என ஆதரவு கோஷங்களும் சென்னைக்கு எழுகிறது.
வாட்சன், ராயுடு, தோனி, ஜடேஜா, டூப்லெஸி, சாம் கர்ரன் என மேட்ச் வின்னர்கள் அதிகம் உள்ள சென்னை FIRE செய்யாமல் போனது கொஞ்சம் ஏமாற்றம் தான்.
விளையாட்டிலும் சரி, வாழ்விலும் சரி வெற்றி தோல்வி என்பது சகஜம் தான்.
மாமன்னர் அலெக்ஸ்சாண்டர், டெல்லி சுல்தான் துக்ளக், தமிழகத்தின் வீரபாண்டிய கட்டபொம்மன் மாதிரியான அரசர்களும் வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளனர்.
அதே வீழ்ச்சி இப்போது சென்னையை ஆரத் தழுவி கொண்டுள்ளது அவ்வளவு தான்.
இந்த முறை செய்த தவறுகளை 2021 ஐபிஎல் தொடரில் சென்னை தவிர்த்து விட்டாலே சென்னை ஐபிஎல் அரங்கில் ஒரு ரவுண்டு வரலாம்.
தேவையுள்ள ஆணிகளை வைத்துக் கொண்டு தேவையில்லாத ஆணிகளை பிடுங்கி எறிவது போல அணியில் பல மாற்றங்களை வரும் சீசனில் சென்னை மேற்கொள்ளும்.
அணியை மீண்டும் அடிப்படையிலிருந்து கட்டமைப்பதற்கு ரசிகர்களின் ஆதரவு தான் இப்போதைக்கு சென்னைக்கான எனெர்ஜி டானிக்.