துபாயில் நேற்று நடந்த டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை முதல் முறையாகக் கைப்பற்றியது ஆஸ்திரேலிய அணி. முதல் இன்னிங்சின்போது, நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் 48 பந்துகளில் 85 ரன்கள் (3 சிக்ஸர்,10 பவுண்டரி) குவித்து ஆட்டமிழந்தார். தொடக்கத்தில் நிதானமாக பேட்டிங் செய்த கேன் வில்லியம்சன், முதல் 16 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தார். அதன்பின் டாப் கியருக்கு பேட்டிங்கை மாற்றிய வில்லியம்ஸன், அடுத்த 31 பந்துகளில் 70 ரன்களை அதிரடியாக குவித்தார். 32 பந்துகளில் தனது அரை சதத்தை எட்டியபோது, கிளென் மேக்ஸ்வெல் வீசிய பந்தை ஒரு கையால் சிக்ஸருக்கு அடித்து அசத்தினார்.