"என்னடா தம்பி இப்படி பண்ணிட்ட" புலம்பும் ஐதராபாத் ரசிகர்கள் ! யார் இந்த "தம்பி" ?

"என்னடா தம்பி இப்படி பண்ணிட்ட" புலம்பும் ஐதராபாத் ரசிகர்கள் ! யார் இந்த "தம்பி" ?
"என்னடா தம்பி இப்படி பண்ணிட்ட" புலம்பும் ஐதராபாத் ரசிகர்கள் ! யார் இந்த "தம்பி" ?
Published on

கொளுத்தும் வெயிலிலும் உஷ்ணத்திலும் விறுவிறு என நடைபெற்றது ஹைதராபாத் - டெல்லி அணிகளுக்கு இடையே விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற நேற்றைய எலிமினேட்டர் சுற்றுப்போட்டி. முதலில் ஆடிய ஐதராபாத் அணி 163 ரன்களை குவிக்க, அதனை சேஸ் செய்ய தொடங்கிய டெல்லி அதிரடியாக விளையாடியது. முதலில் பிருத்வி ஷா 58 ரன்களை குவிக்க, பின்பு களமிறங்கிய ரிஷப் பன்ட் 21 பந்தில் 49 ரன்களை விளாச, இறுதியாக 2 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வென்றது டெல்லி.

டெல்லியின் வெற்றி கடைசி மூன்று ஓவரில்தான் உறுதியானது என்று சொல்லலாம். அதிலும் பாசில் தம்பி வீசிய அந்த 18 ஆவது ஓவர் ஐதராபாத்தை போட்டியில் இருந்து வெளியேற்ற காரணமானது. பாசில் தம்பி பந்து வீசுவதற்கு முன்பு டெல்லி 3 ஓவர்களில் 34 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை இருந்தது. அப்போது புவனேஷ்வர் குமார் மற்றும் கலீல் அகமது இருவருக்கும் ஓவர்கள் இருந்தது. அதில் கலீல் அகமது 2 ஓவர்கள் வீசி 17 ரன்களை கொடுத்து 2 விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தார். ஆனால், ஐதராபாத் கேப்டன் வில்லியம்சன் 18 ஆவது ஓவர் பசில் தம்பியிடம் கொடுத்தார்.

ரிஷப் பன்ட் அதிரடியாக அடிக்க தொடங்குவார் என்று தெரிந்தும், தம்பியிடம் ஓவரை கொடுத்தார் வில்லியம்சன். முதல் பந்தில் இருந்து நான்காவது பந்து வரை 2 சிக்ஸர்கள் 2 பவுண்டரிகள் என்று பறக்கவும் தெறிக்கவும் விட்டார்  பன்ட். பின்பு,  தம்பி வீசிய 18 ஆவது ஓவரில் மட்டும் 21 ரன்கள் பறந்தது. இதனையடுத்து கடைசி 2 ஓவரில் 12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று எளிதானது இலக்கு. அதன் பின் பன்ட் அவுட்டானாலும், கடைசி ஓவரில் வெற்றிப் பெற்றது டெல்லி.

இப்போது சமூக வலைத்தளங்களில் பாசில் தம்பிதான் ஹாட் டாப்பிக். ஐதராபாத் ரசிகர்கள் பாசில் தம்பியை வறுத்தெடுத்து வருகின்றனர். மேலும் வில்லியம்சன் செய்த தவறால்தான் வெற்றி வாய்ப்பு பறிபோனது என வேதனை தெரிவித்து வருகின்றனர். பாசில் தம்பியை வைத்து மீம்களுக்கும் பஞ்சமில்லாமல் பவனி வருகின்றது. அது சரி யார் இந்த பாசில் தம்பி ?

கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர் பாசில் தம்பி. வேகப் பந்து வீச்சாளரான அவர் கேரள மாநிலத்துக்காக பல்வேறு போட்டிகளில் பங்கேற்றுள்ளார். 25 வயதான தம்பி 2017 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் குஜராத் லயன்ஸ் அணிக்காக விளையாடினார். அப்போது வளர்ந்து வரும் இளம் வீரர் என்ற விருதையும் வாங்கினார்.

பின்பு 2018 இல் இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 போட்டிக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அவருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனையடுத்து ஐதராபாத் அணிக்காக ஏலம் எடுக்கப்பட்டார் பாசில் தம்பி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com