கோலி, பாண்ட்யா ரன் வேகம்: நியூசி. சுழல்பந்துவீச்சாளர் திட்டம்

கோலி, பாண்ட்யா ரன் வேகம்: நியூசி. சுழல்பந்துவீச்சாளர் திட்டம்
கோலி, பாண்ட்யா ரன் வேகம்: நியூசி. சுழல்பந்துவீச்சாளர் திட்டம்
Published on

இந்திய கேப்டன் விராத் கோலி, அதிரடி பேட்ஸ்மேன் ஹர்திக் பாண்ட்யா ஆகியோரின் ரன்வேகத்தை கட்டுப்படுத்த திட்டம் வைத்திருப்பதாக நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சான்ட்னர் சொன்னார்.

அவர் மேலும் கூறும்போது, ‘ சுழற்பந்து வீச்சை எதிர்கொள்வதில் இந்திய வீரர்கள் சிறப்பானவர்கள். ஹர்திக் பாண்ட்யா சுழல் பந்துவீச்சில் அபாரமாக ஆடியதை ஆஸ்திரேலிய போட்டிகளில் பார்த்தேன். ஆஸ்திரேலிய சுழல்பந்துவீச்சாளர் ஆதம் ஜம்பா, இலங்கையில் புஷ்பகுமாரா பந்துகளில் தொடர்ந்து 3 சிக்சர்களை பறக்கவிட்டதை ரசித்தேன். ஒரு முறை அவர் அடிக்க ஆரம்பித்துவிட்டால், அவரை கட்டுப்படுத்துவது கஷ்டம். சரியான இடத்தில் பந்தை வீசி, அவரை தவறிழைக்க வைக்க முயற்சி செய்வேன். அதிக ரன்களை விட்டுக்கொடுக்காமல் டாட் பால்களை வீசினால், பேட்ஸ்மேன்கள் தவறிழைப்பார்கள் என நம்புகிறேன். அதே போல விராத் கோலியையும் கட்டுப்படுத்துவதும் கஷ்டம். அவர் சிறப்பாக விளையாடக் கூடியவர். இவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பேன்’ என்றார். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com