இன்னும் 10 ஆண்டுகள் விளையாட முடியும்: விராட் கோலி நம்பிக்கை

இன்னும் 10 ஆண்டுகள் விளையாட முடியும்: விராட் கோலி நம்பிக்கை
இன்னும் 10 ஆண்டுகள் விளையாட முடியும்: விராட் கோலி நம்பிக்கை
Published on

இந்திய கிரிக்கெட் அணிக்காக இன்னும் 10 ஆண்டுகள் விளையாட முடியும் என கேப்டன் விராட் கோலி‌ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, முடிந்த அளவு நாட்டிற்கு சேவை செய்வது அவசியம். முழு உடல் தகுதியுடன் இருக்கும்பட்சத்தில், தம்மால் இன்னும் 10 ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாட முடியும் என தெரிவித்தார். 


தற்போது உள்ள இளைய சமுதாயத்தினர் விளையாட்டு மைதானங்களில் நேரத்தை செலவு செய்யாமல், மொபைல் ஃபோன்கள் உள்ளிட்ட சாதனங்களில் நேரத்தை வீணடிக்கின்றனர். நான் இதுவரை சாதித்தவை அனைத்தும் விளையாட்டால்தான் முடிந்தது. இனிவரும் காலங்களில் அனைத்து வழிகளிலும் மேலும் நல்ல முறையில் என் பங்களிப்பை கொடுப்பேன் என்றும் விராட் கோலி கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com