இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி போட்டி இன்று ஹைதராபாத் ராஜிவ்காந்தி மைதானத்தில் நடக்கவிருக்கிறது. 1-1 என்று இரு அணிகளும் சமநிலையில் உள்ளதால், தொடரின் டிசைடரான இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
ஆஸ்திரேலியா அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் போட்டியில் அபார வெற்றி பெற்று தொடரின் முன்னிலையில் இருந்த ஆஸ்திரேலிய அணியை, இரண்டாவது போட்டியில் பதிலடி கொடுத்து 1-1 என்ற நிலையில் தொடரை சமன் செய்திருக்கிறது இந்திய அணி. பும்ரா அணிக்கு மீண்டும் திரும்பி இருப்பதால் அணியின் பவுலிங் யூனிட்டிற்கு புது பலம் கிடைத்திருக்கிறது.
இந்நிலையில் உலககோப்பைக்கு இடையில் இன்னும் ஒரே ஒரு தொடர் தான் மீதமிருப்பதால், அதற்குள் அணிக்குள் இருக்கும் பவுலிங்க் காம்போவை சரிசெய்து இறுதிசெய்து கொள்ளும் முனைப்பில் இந்திய அணி இருக்கிறது. மற்றும் ரிஷப் பண்டா இல்லை தினேஷ் கார்த்திக்கா இல்லை இருவரையும் அணிக்குள் வைத்து பவுலிங் யூனிட்டிற்கு தேவையான உத்வேகத்தையும் உறுதியையும் மேம்படுத்தி உலககோப்பைக்கு வலிமையான அணியுடன் செல்லும் முடிவை எடுக்குமா இந்தியா என்று பார்க்க வேண்டும்.
மேலும் போட்டி நடக்கவிருக்கும் இந்த ஆடுகளத்தில் தான் இதற்கு முன்னர் நடந்த போட்டியில் இந்தியா 208 ரன்களை சேஸ் செய்து வெஸ்ட் இண்டிஸ்ஸை வெற்றி பெற்றது. அதில் விராட் கோலி 94* ரன்கள் எடுத்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். விராட் கோலியிடமிருந்து அப்படி ஒரு இன்னிங்க்ஸ் இன்று கிடைக்குமா என்று பார்க்க வேண்டும்.
போட்டி இரவு 7 மணிக்கு ராஜிவ் காந்தி மைதானத்தில் ஹைதராபாத்தில் நடக்கிறது.