மைதானத்தில் இருந்து 3.கி.மீ தூரம் ஒட்டம்: தனக்குத்தானே தண்டனை கொடுத்த ஸ்மித்!

மைதானத்தில் இருந்து 3.கி.மீ தூரம் ஒட்டம்: தனக்குத்தானே தண்டனை கொடுத்த ஸ்மித்!
மைதானத்தில் இருந்து 3.கி.மீ தூரம் ஒட்டம்: தனக்குத்தானே தண்டனை கொடுத்த ஸ்மித்!
Published on

டெஸ்ட் போட்டியில் விரைவாக ஆட்டமிழந்ததால், தனக்குத்தானே தண்டனை கொடுத்திருக்கிறார், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித், பாகிஸ்தான் ஸ்பின்னர் யாசிர் ஷா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவர் பந்துவீச்சில் 7 முறை ஆட்டமிழந்ததைக் குறிப்பிடும் விதமாக யாசிர் ஷா, கைவிரல்களை காட்டினார். இந்தப் போட்டி முடிந்ததும் பிரிஸ்பேன், கப்பா மைதானத்தில் இருந்து 3 கி.மீ தூரம் ஓடியே, தங்கியிருந்த ஓட்டலுக்குச் சென்றார் ஸ்மித்.

’ஏன் இந்த ஓட்டம்?’ என்று அவரிடம் கேட்டபோது, ‘’அதிகமாக ரன்கள் எடுக்கவில்லை என்றால் எனக்கு நானே எப்போதும் கொடுத்துக் கொள்ளும் தண்டனை இது. நான் சதமடித்தால், அன்று இரவு சாக்கலேட் பாருக்கு சென்று கொண்டாடுவேன். அதிக ரன்கள் அடிக்கவில்லை என்றால், ஜிம்முக்குச் சென்று அதிகமாக உடற்பயிற்சி செய்வேன் அல்லது சில கி.மீ ஓடி எனக்கு நானே தண்டனை கொடுத்துக்கொள்வேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com